search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்"

    • 100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார துறையின் 100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கோலப்போட்டி, அடுப்பு இல்லா சமையல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், சதுரங்கப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

    செப்டம்பர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இருதயத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக் கொள்வது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரை நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கார் மூலம் நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு.

    ஜோத்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

    • செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நோய் வராமல் இருக்க ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    திருப்பூர் :

    ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து உணவு பற்றிய பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 15 வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது. சத்தான உணவுகளான ,கீரைகள், காய்கறிகள் இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இவற்றில் அதிகளவில் முக்கிய சத்துக்கள் காணப்படுகிறது.வைட்டமின் -ஏகொண்ட முருங்கை, பப்பாளி போன்ற பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகம் கேடு விளைவிக்கும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தோடு வாழவேண்டும்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன், பாலசுப்பிரமணியம், சுந்தரம் , பூபதி ராஜா, பாக்கியலஷ்மி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். அதன் படி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காய்கறிகளின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் கண்காட்சியினை நடத்த திட்டமிட உள்ளார்கள் என்றார்.

    • கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    • தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாகதேசிய மருத்துவர் தின நிகழ்ச்சி அவினாசி ரோட்டில் உள்ள டி. எஸ். கே. மகப்பேறு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

    மருத்துவர் ராய் நினைவாக இந்த தினம் மருத்துவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. மருத்துவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் . நோயாளிகளிடம் கனிவாக பேசவேண்டும். தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் கடந்த வருடம் தொடங்கி இன்று வரை தமிழக அரசு வழிகாட்டுதலின் படி 30 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களிலும் அலகு-2 மாணவர்கள் தன்னார்வலராக கலந்து கொண்டு சிறப்பாக சேவை செய்துள்ளனர். இது போல அனைத்து மாணவர்களும் பேரிடர் காலங்களில் சுகாதார துறையுடன் கைகோர்க்கும் போது எங்களுக்கும் உற்சாகம் எழும் என்றார். பிறகு மாணவர்கள் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் அவர்கள் தயார்படுத்தி வைத்திருந்த மருத்துவர் தின வாழ்த்து மடலையும், துணிப்பைகளையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

    பிறகு அலகு-2 மாணவர்கள் தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று மருத்துவர்களுக்கு வாழ்த்துமடலை அளித்தனர். இறுதியில் மருத்துவர் கலைச்செல்வம் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் அருள்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 215 பேர் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கியின் கிளை மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். 215 பேர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரன் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    ×