வெள்ளகோவிலில் மருத்துவர்கள்-செவிலியர்களுக்கு விளையாட்டு போட்டி

100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
செவிலியர்கள் ஓட்டப்பந்தயம் போட்டியில் பங்கேற்ற காட்சி.
செவிலியர்கள் ஓட்டப்பந்தயம் போட்டியில் பங்கேற்ற காட்சி.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார துறையின் 100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கோலப்போட்டி, அடுப்பு இல்லா சமையல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், சதுரங்கப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

செப்டம்பர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இருதயத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக் கொள்வது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com