search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம்"

    • சிறுமியின் உடலை தோளில் தூக்கிக்கொண்டு பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார்
    • அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சட்டார்பூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 4 வயது சிறுமி இறந்தார். ஆம்புலன்சு வசதி இல்லாததால் அந்த சிறுமி உடலை உறவினர்கள் தோளில் சுமந்து எடுத்து சென்றனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல அங்கு மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பதான் என்ற கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உறவினர் அந்த குழந்தையை சட்டார்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. இதையடுத்த குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு ஆம்புலன்சு மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உறவினர் முடிவு செய்தார். ஆனால் ஆம்புலன்சு எதுவும் கிடைக்கவில்லை.

    தனியார் வாகனத்தில் எடுத்து செல்ல அவரிடம் பணவசதி இல்லை. இதனால் அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு பஸ்சில் செல்லலாம் என நினைத்தார். சிறுமியின் உடலை துணியால் மூடி தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள ரோட்டில் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தே சென்றார். தன் ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

    ஆனால் பஸ்சில் டிக்கெட் எடுக்க கூட அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. தனது நிலையை பஸ்சில் இருந்த பயணிகளிடம் கூறினார். அவர் மேல் இரக்கம் காட்டிய சக பயணிகள் பணம் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அவர் குழந்தை உடலை தோளில் சுமந்தவாறு பஸ்சில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றார்.

    இந்த காட்சிகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • சம்பவத்தன்று சிறுமியை வேனில் இருந்து இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது.
    • பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பது தெரியவந்தது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் எல்கேஜி படிக்கும் சிறுமியிடம் வேன் டிரைவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளர். தலைநகர் போபாலில் உள்ள தனியார் கிண்டர் கார்டன் பள்ளியில் எல்கேஜி படிக்கும் அந்த மாணவி, கடந்த வாரம் பள்ளியில் இருந்து பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளார். ஆனால் சிறுமியை இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது. சிறுமியின் உடைகளும் மாற்றப்பட்டிருந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், விசாரித்ததில் அந்த சிறுமி வேன் டிரைவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பள்ளி வேனுக்குள் அதுவும் பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

    இது தொடர்பான புகாரின்பேரில் வேன் டிரைவர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி கேரளாவை சேர்ந்த 23 இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசம் வரை மோட்டார் சைக்கிள் சாதனைப் பயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த மோட்டார் சைக்கிள் சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சாதனை மோட்டார் சைக்கிள் பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட6 மாநிலங்கள் வழியாக வருகிற 11-ந்தேதி மத்தியபிரதேசத்தை சென்றடைகிறது. மொத்தமுள்ள 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.

    மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “வாக்கு வங்கி அரசியல் இந்திய சமூகத்தை கரையான் போல அரித்து விட்டது” என பேசினார். #PMModi #KaryakartaMahakumbh
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், போபால் நகரில் இன்று நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் மேம்பாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். வாக்கு வங்கி அரசியல் நம்முடைய சமூகத்தை கரையான்கள் போல அழித்து விட்டது. வாக்கு வங்கி அரசியலை இந்தியாவைவிட்டு அகற்றுவதுதான் எங்களுடைய பணியாகும். மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சி தொடர்பாக காங்கிரசிடம் எந்த எண்ணமும் கிடையாது. 

    மத்தியில் இப்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க ஆட்சியின் நம்பிக்கை என்னவென்றால் இந்தியா வளர்ச்சியடை வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடை வேண்டும் என்பதே. மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தாலும் அதற்கான காரணங்களை ஆராய காங்கிரஸ் நினைக்கவில்லை. 

    இப்போது கூட்டணி அமைக்க காங்கிரஸ் சிறிய கட்சிகளிடம் கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது, எனவே இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க பார்க்கிறது. இந்திய பிரதமரை உலகமா தேர்வு செய்கிறது? 

    காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது? அவர்களிடம் இப்போது எதுவும் கிடையாது. காங்கிரஸ் கட்சி  எவ்வளவுதான் களங்கம் ஏற்படுத்தினாலும் தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    போன ஜென்மத்தில் சகோதரிகளாக இருந்தோம் எனக்கூறி இளம்பெண்ணை கடத்த முயன்ற பெண் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை மத்தியப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
    போபால்:

    மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி என்ற பெண், தனது தாய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையில் சில வாரங்கள் இருந்துள்ளார். அப்போது, 40 வயதான கிரண் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு மலரவே போன் நம்பர்களை பறிமாற்றம் செய்து பேசும் அளவுக்கு இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் வந்த கிரண் போன ஜென்மத்தில் நாம் இருவரும் சகோதரியாக இருந்தோம் எனக்கூறி ஷிவானியை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனை அடுத்து, ஷிவானி குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் கிரண் மற்றும் அவருடன் வந்த பைகுலா போலீஸ் நிலைய காவலர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    நண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். 

    தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.

    வெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.

    இவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.

    அப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்திய பிரதேச மாநில 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் கோத்ரா கலவரம் குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என அம்மாநில மந்திரி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் புத்தகத்தில், சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியா என்ற பாடத்தில் பாஜக இந்துத்துவ சித்தாந்தத்தை ஊக்குவித்து வந்ததாகவும், குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் குறித்தான பாடங்கள் இடம்பெற்றுள்ளன. கலவரம் நடந்த நேரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு பிரதமர் வாஜ்பாய், ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதாக பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், மேற்கண்ட பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய பிரதேச கல்வி மந்திரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் பாடங்களில் முறையற்ற முறையில் நுழைக்கப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    பாஜக உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. 
    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஸ் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அம்மாநிலத்தில் 312 கல்லூரிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பல பட்டய படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்று விக்கப்படுகிறது. இந்நிலையில், இனிவரும் தேர்வுகளை மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஷ் ஆகிய மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹிங்கிலீஸ் என்பது இந்தியையும் இங்கிலீஷையும் கலந்து எழுதும் வகையாகும். அதாவது பேசும் இந்தியை ஆங்கில எழுத்தில் எழுதும் முறை. தமிழ் உள்ளிட்ட எல்லா பிராந்திய மொழிகளும் இவ்வாறு எழுதப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் தங்களுக்கு பதில் தெரிந்தும் ஆங்கில புலமை இல்லாததால் பதில் எழுத சிரமப்படுகின்றனர்.

    இதன் காரணமாக இந்தியையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுத அனுமதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 
    ×