search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் கைது"

    • வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
    • பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.

    • மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கண்ணா அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை குடிக்க தர வேண்டும் என கேட்டு தகராறு செய்தார்.
    • வெங்கண்ணா தாயார் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 63). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் வெங்கண்ணா (21). கணவர் இறந்து விட்டதால் லட்சுமி தனது 2 மகன்களை பாசமாக வளர்த்து வந்தார்.

    வெங்கண்ணா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் பலருடன் பழக்கம் ஏற்பட்டு மது போதைக்கு அடிமையானார். குடிக்க பணம் கேட்டு தாயாரை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்தார்.

    நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கண்ணா அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை குடிக்க தர வேண்டும் என கேட்டு தகராறு செய்தார்.

    அதற்கு அவரது தாயார் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கண்ணா திண்ணையில் படுத்து கொண்டு இருந்த தாயாரை தரதரவென தெருவிற்கு இழுத்து வந்தார்.

    பின்னர் அவரது கழுத்திலும், வயிற்றிலும் காலால் சரமாரியாக மிதித்து கொடூரமாக தாக்கினார்.

    இதனால் அவரது தாய் வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் யாரும் அவரை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்தனர்.

    வெங்கண்ணா தனது தாயை காலால் மிதிக்கும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இதனை கண்ட காக்கிநாடா போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக வெங்கண்ணாவை கைது செய்து அவரது தாய்க்கு சிகிச்சை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமி மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் போலீசார் வெங்கண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே சொத்தை எழுதி தர தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே தெற்கு ராமபுரம் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 38). இவர் தனது தாய் ருக்குமணியிடம் சொத்தை எழுதி தர கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ருக்குமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மகன் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    • வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
    • அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.

    அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டார்.
    • தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தைசேர்ந்தவர் கலியன் மகன் பழனிவேல் (50). விவசாயி, இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிவேல் அவரது மனைவி சின்ன பொண்ணு, 2 வது மகன் பால கிருஷ்ணன் (27) ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் சாப்பிட்ட தட்டை கழுவி தண்ணீரை வெளியேஊற்றுவதில் தந்தை மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன் தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் பி.காம். படித்து முடித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாமீனில் வந்த 6 மாதத்தில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • தியாகராஜனை ஜாமீனில் எடுக்க அவரது தந்தை முத்துசாமி முயற்சி செய்து வந்தார். ஆனால் பணம் பிரச்சினை காரணமாக அவரால் ஜாமீன் பெற முடியவில்லை

    கோவை:

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் சூளேஸ்வ ரன்ப ட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 67). காவலாளி.

    இவரது மகன் தியாகராஜன் (38). கூலி தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது சமந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அப்போது தியாகராஜனை ஜாமீனில் எடுக்க அவரது தந்தை முத்துசாமி முயற்சி செய்து வந்தார். ஆனால் பணம் பிரச்சினை காரணமாக அவரால் ஜாமீன் பெற முடியவில்லை. பின்னர் தியாகராஜனின் நண்பர் ஒருவர் அவருக்கு ஜாமீன் பெற்று கொடுத்தார்.

    இதையடுத்து அவர் வெளியே வந்தார். தினமும் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார். இந்த நிலையில் தியாகராஜன், முத்துசாமியிடம் ஏன் தன்னை ஜாமீனில் எடுக்கவில்லை என கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டு வந்த தியாகராஜன் மீண்டும் முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த தியாகராஜன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த முத்துசாமி வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் முத்துசாமியை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து முத்துசாமி கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் வந்த தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.

    ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.

    இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
    • ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன்விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48).

    சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவர் பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். நேற்று முத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ரோஜாவுக்கும், சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமணி தாய் ரோஜாவை கீழே கிடந்த கட்டையால் தாக்கி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மகனை தடுத்தார். அப்போது சுடலைமணி கட்டையால் தந்தையையும் சரமாரியாக தாக்கினார். இதில் முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே சுடலைமணி அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலை குறித்து தகவலறிந்ததும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி தப்பியோடிய சுடலைமணியை கைது செய்தனர்.

    தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமாக முத்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயதான தாயாரை அடித்து துன்புறுத்திய மகனை கைது செய்த போலீசாரிடம் மகனை மன்னித்து விடுமாறு தாய் கெஞ்சி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தில் 82 வயது மூதாட்டியை தினமும் அவரது இளைய மகன் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திபிரவா தேவி, இவருக்கு வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் அரசு பணியில் இருக்கும்போதே மரணமடைந்துவிட்டார். அவரது பணி இவரது மூத்த மகன் விகாஷ்க்கு கிடைத்துள்ளது. பணி கிடைக்கவும், தனது தாயைப் பிரிந்து மனைவி, குழந்தைகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு துத்தபுகுருக்கு விகாஷ் சென்றுவிட்டார். இதனால் தனது இளைய மகன் புலு பிரசாத் தேப்புடன் மூதாட்டி சாந்திபிரவா வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தினமும் தனது தாயை புலு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அனைத்து வேலைகளையும் அவரையே செய்யச் சொல்லியுள்ளார். காலால் எட்டி மிதித்துள்ளர். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரத்யஸா ராய் சவுத்ரி வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து போலீசார் புலுவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மூதாட்டி சாந்திபிரவாவை வடக்கு தும்தும் நகராட்சி பராமரித்து வருகிறது. மகனிடம் அடி வாங்கியும், தனது மகனை மன்னித்து விடுமாறு சாந்திபிரவா கெஞ்சியுள்ளார்.
    ×