search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்"

    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வீடியோ அனுப்பியதால் போலீஸ்காரர் பணிநீக்கமா? அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தனர்.
    • உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராகிம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆயுதப்படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தேன். கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரத்திடம் எனக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க கோரி மனு அளித்தேன். இதற்கு போலீஸ் கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறி சாதாரண விடுப்பு வழங்கினார்.

    இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை வீடியோ வெளியிட்டேன்.

    அது சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. எனது தரப்பு கருத்துகளை கேட்காமலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்து என்னை நிரந்தரமாக நீக்கிவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல.

    ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் சண்முகசுந்தரம், டிக்-டாக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் போலீஸ் சீருடையில் வெளியிட்டார்.

    அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் எச்சரித்து அதிகாரிகளால் மன்னிக்க ப்பட்டது. இதுபோல பல போலீஸ்காரர்கள் மன அழுத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் சில போலீஸ்காரர்களை மட்டும் டி.ஜி.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வீடியோவை வெளியிட்டதாகவும், முக கவசம் அணியவில்லை என்று கூறியும் என்னை பணி நீக்கம் செய்துள்ளனர்.

    உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • ராமகிருஷ்ணன் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
    • இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பெட்டாவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 4-ந்தேதியன்று இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்தார். இந்த நிலையில் இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    அதற்கு "காக்கும் உறவுகள்" என பெயர் வைத்து, அதன் மூலம் மறைந்த ராமகிருஷ்ணனின் தாயார் மற்றும் தந்தை பெயரில் தபால் நிலையத்தில் நிரந்தர வைப்புத்தொகை மூலம் ரூ.12 லட்சமும், ரொக்கமாக ரூ.1 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் முன்னிலையில் இறந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மறைந்த காவலரின் நினைவாக அவரது குடும்பத்திற்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு காவல்துறையினரிடமும், பொதுமக்களிடையேயும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

    • சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் செல்போன் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினாம்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    சொந்த ஊருக்கு வந்த வீராசாமி நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அவரிடம் இருந்த ரூ.24 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வீராசாமி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
    • தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31).


    இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது ஜோதி நகரில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரது மகன் பாபு என்பவர் மது குடித்து விட்டு தகராறு செய்வதாகவும் தகவல் வந்தது. இனையடுத்து போலீஸ்காரர் ராஜபாண்டி தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.


    அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாசானி (41) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கினார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ராஜபாண்டிக்கு தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கு இருந்தவர் போலீஸ்காரரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீ சார் போலீஸ்கா ரரை தாக்கிய மாசானியை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாசானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனில் குடியிருப்பவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் முருகப்பன்(19), நண்பர்களுடன் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள வழுக்குப் பாறையின் அருகே உள்ள தண்ணீர் கிடங்கில் குளிக்க சென்றார்.

    மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×