search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FINANCIAL ASSISTANCE TO THE FAMILY"

    • ஒன்றிய தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்பு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில், நடைபெற்ற இலவச புடவைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 மூதாட்டிகள் பலியாகினர்.

    மேலும், 12 பெண்கள் பலத்த காயம் அடைந்து வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது. காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் இறந்த வர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், குடும்பத்தில் உள்ள கல்வி பயிலும் மாணவரது கல்விக்கான முழு செலவையும் தானே ஏற்பதாக உறுதி அளித்தார்.

    இந்த நிகழ்வின் போது, தேவஸ்தானம் ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜி அன்பு, பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், கவுன்சிலர் பொன்ன ம்பலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ராமகிருஷ்ணன் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
    • இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பெட்டாவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 4-ந்தேதியன்று இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்தார். இந்த நிலையில் இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    அதற்கு "காக்கும் உறவுகள்" என பெயர் வைத்து, அதன் மூலம் மறைந்த ராமகிருஷ்ணனின் தாயார் மற்றும் தந்தை பெயரில் தபால் நிலையத்தில் நிரந்தர வைப்புத்தொகை மூலம் ரூ.12 லட்சமும், ரொக்கமாக ரூ.1 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் முன்னிலையில் இறந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மறைந்த காவலரின் நினைவாக அவரது குடும்பத்திற்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு காவல்துறையினரிடமும், பொதுமக்களிடையேயும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

    ×