search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரடைப்பால் இறந்த திருச்சி போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதியுதவி - காக்கும் உறவுகள் என பெயரிட்டு டி.ஐ.ஜி. வழங்கினார்
    X

    மாரடைப்பால் இறந்த திருச்சி போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதியுதவி - காக்கும் உறவுகள் என பெயரிட்டு டி.ஐ.ஜி. வழங்கினார்

    • ராமகிருஷ்ணன் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
    • இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பெட்டாவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 4-ந்தேதியன்று இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்தார். இந்த நிலையில் இறந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2017 பேட்ஜ் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.13 லட்சம் நிதியை திரட்டினர்.

    அதற்கு "காக்கும் உறவுகள்" என பெயர் வைத்து, அதன் மூலம் மறைந்த ராமகிருஷ்ணனின் தாயார் மற்றும் தந்தை பெயரில் தபால் நிலையத்தில் நிரந்தர வைப்புத்தொகை மூலம் ரூ.12 லட்சமும், ரொக்கமாக ரூ.1 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் முன்னிலையில் இறந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மறைந்த காவலரின் நினைவாக அவரது குடும்பத்திற்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு காவல்துறையினரிடமும், பொதுமக்களிடையேயும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

    Next Story
    ×