search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போனஸ்"

    • போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், ஒரிசாவை போல தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, திருமா பாண்டி, நிர்வாகிகள் தேவா அருள்ராஜ், பெரியசாமி, ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • இங்கு பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பாத்திர தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் போனஸ், ஒரு வாரத்திற்கு முன் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.உலோகத்தின் அடிப்படையில் உற்பத்தியை பொறுத்து 16 சதவீதம் முதல், 18 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • இவர்களுக்கு சுமார் 30 ஆண்டுக்கு பின் தீபாவளி போனஸ் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செலவடை கிராமம் பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் தினமும் விவசாயிகள் சுமார் 700லிட்டர் பாலை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இங்கு சேகரிக்கும் பால் சேலம் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் சங்கம் உருவாக்கியதில் இருந்து முதல் முறையாக 30ஆண்டுக்கு பின்னர் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. சங்கத்தில் உள்ள லாப தொகையில் இருந்து 83 ஆயிரம் ரூபாயை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளனர். இந்த போனஸ் வழங்கியதால் மேலும் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், துணைத் தலைவர் சின்னண்ணன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மலர், ரத்தினம், வெங்கடாஜலபதி, குமார், கண்ணன், செயலாளர் ஜெயக்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும்
    • கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா்.

     திருப்பூர்:

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். இதில் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை விட கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே போனஸ் வழங்கும்படி பாத்திர பட்டறைதாரா்களையும், பாத்திரம் உற்பத்தியாளா்களையும் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கத்தின் தலைமை மகாசபை கூட்டம் திருப்பூரில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பழனிசாமி, துணை தலைவராக ஆறுமுகம், பொதுச்செயலாளராக ரவி, துணை செயலாளராக கதிர்வேல், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வருகிற 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். கட்டிடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்பட்டு வரும் பணப்பலன்கள் முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணித்து தொழிலாளர்களுக்கு உரிய பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தில் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தீபாவளி பண்டிகையையொட்டி ராம்கோ குழும தொழிலாளர்களுக்கு ரூ.12.49 கோடி போனஸ் பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா உத்தரவு பிறப்பித்தார்.
    • எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, இயக்குநர் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் என்.ஆர்.கே. ராம்குமார் ராஜா, ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.

    இதில் ராம்கோ குழுமத்தின் அனைத்து நூற்பாலைகளுக்கும், துணி உற்பத்தி ஆலைகளுக்கும் போனஸ் தொகையினை சேர்மன் அறிவித்தார். இதன்படி ராம்கோ குழுமத்தை சேர்ந்த நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போனஸ் தொகை ரூ.12.49 கோடி பட்டுவாடா செய்ய சேர்மன் உத்தரவிட்டார்.

    இந்த பேச்சுவார்த்தையில் ராம்கோ நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி பிரிவின் தலைவர் மோகனரங்கன், முதன்மை நிதி அதிகாரி ஞானகுருசாமி, துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன், முதுநிலை துணை தலைவர் (பேப்ரிக்ஸ்) முருகேச பிள்ளை, சுதர்சனம் எஸ்பின்னிங் மில்ஸின் முதன்மை நிதி அதிகாரி விஜயகோபால், துணை பொது மேலாளர் (மனிதவளம்) ரங்கராஜ், மில்ஸ் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எச்.எம்.எஸ் பொது செயலாளர் என்.கண்ணன், மில் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ராம்கோ குரூப் நிறுவனம், வழக்கம்போல் இந்த ஆண்டும் சிற ப்பான போனஸ் தொகை யினை அறிவித்து, தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் நன்றி யையும், மகிழ்ச்சியையும் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.

    • பஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ .ஐ. டி. யூ. சி. தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,

    கடந்த கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட போனஸ் சேர்த்து வழங்கப்பட வேண்டும், பேருந்து நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகரக் கிளைகள் முன்பாக சங்கத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா,நுகர் பொருள் வாணிப கழக சங்க பொருளாளர் கோவிந்த ராஜன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் மனோகர், இருதயராஜ், குணசேகரன், சங்க நிர்வாகிகள் சுந்தர பாண்டியன், சண்முகம் , சுமன், சந்திரன், சுகு மார் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சாவூர் நகர கிளை செயலாளர் ரெங்கதுரை நன்றி கூறினார். 

    • 25 சதவீத போனஸ் வழங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.

    சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அரசு உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி போனஸ் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்.

    அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், போனஸ் சட்டத்தின் படி 30 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் ,

    கடந்த கால போனஸ் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, மாணிக்கம், சுந்தர பாண்டியன், சந்திரன், ரங்கதுரை, செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார்.

    ×