search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahasabha meeting"

    • திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி, சோமசுந்தரம், லாரி சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். செயலாளர் மோகன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு -செலவு கணக்குகளை வாசித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் ஆட்டோ நகர் அமைத்து தர வேண்டும். திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் சார்பில் விரைவில் திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதையில் புதிய பெட்ரோல் பங்க் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஆடிட்டர் மாதவன், சட்ட ஆலோசகர் வக்கீல் பரணிதரன், மூத்த உறுப்பினர் அப்பாவு, சக்திவேல் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் அனிதா வேலு, பாரி கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சாலியர் உறவின் முறை பொதுக்கட்டிடத்தில் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி மேலாண்மை இயக்குநர் ரகுநாத் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் ஜனதா சேலை வேலை வழங்க வேண்டு மென பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை குறித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் வலியுறுத்தியும் உள்ளதாக கூறினார்.

    மேலும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரது வழியில் நமது மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அமைச்ச ரும், தொழில்த்துறை அமைச்சரும், நானும் நெசவாளர்களுக்கு உறு துணையாக இருப்போம் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து சங்கத்திலுள்ள நெசவாளர் அனைவருக்கும் போனஸ் தொகையையும் நெசவு அச்சு பிரைம் செட்-ஐ வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் குருநமச்சிவயம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திர குமார், குருசாமி, குணா ராமலட்சுமி, நாகேஷ்வரன் மற்றும் திருவள்ளுவர், நடராஜன் நெசவாளர்கள் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கத்தின் தலைமை மகாசபை கூட்டம் திருப்பூரில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பழனிசாமி, துணை தலைவராக ஆறுமுகம், பொதுச்செயலாளராக ரவி, துணை செயலாளராக கதிர்வேல், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 41 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வருகிற 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். கட்டிடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்பட்டு வரும் பணப்பலன்கள் முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணித்து தொழிலாளர்களுக்கு உரிய பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தில் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×