search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்க மகாசபை கூட்டம்
    X

    ராஜபாளையத்தில் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபை கூட்டம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. 

    நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்க மகாசபை கூட்டம்

    • நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சாலியர் உறவின் முறை பொதுக்கட்டிடத்தில் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி மேலாண்மை இயக்குநர் ரகுநாத் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் ஜனதா சேலை வேலை வழங்க வேண்டு மென பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை குறித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் வலியுறுத்தியும் உள்ளதாக கூறினார்.

    மேலும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரது வழியில் நமது மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அமைச்ச ரும், தொழில்த்துறை அமைச்சரும், நானும் நெசவாளர்களுக்கு உறு துணையாக இருப்போம் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து சங்கத்திலுள்ள நெசவாளர் அனைவருக்கும் போனஸ் தொகையையும் நெசவு அச்சு பிரைம் செட்-ஐ வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் குருநமச்சிவயம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திர குமார், குருசாமி, குணா ராமலட்சுமி, நாகேஷ்வரன் மற்றும் திருவள்ளுவர், நடராஜன் நெசவாளர்கள் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×