search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61-வது மகாசபை கூட்டத்தில் சங்கத் தலைவர் மூர்த்தி பேசியபோது எடுத்த படம்.

    காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி, சோமசுந்தரம், லாரி சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். செயலாளர் மோகன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு -செலவு கணக்குகளை வாசித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் ஆட்டோ நகர் அமைத்து தர வேண்டும். திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் சார்பில் விரைவில் திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதையில் புதிய பெட்ரோல் பங்க் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஆடிட்டர் மாதவன், சட்ட ஆலோசகர் வக்கீல் பரணிதரன், மூத்த உறுப்பினர் அப்பாவு, சக்திவேல் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் அனிதா வேலு, பாரி கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×