பாத்திர தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் - தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டி வலியுறுத்தல்

தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும்கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

 திருப்பூர்:

திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். இதில் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை விட கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே போனஸ் வழங்கும்படி பாத்திர பட்டறைதாரா்களையும், பாத்திரம் உற்பத்தியாளா்களையும் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com