என் மலர்
உள்ளூர் செய்திகள்

போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மதுரை
மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், ஒரிசாவை போல தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, திருமா பாண்டி, நிர்வாகிகள் தேவா அருள்ராஜ், பெரியசாமி, ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






