என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பாத்திர தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்
- அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
- இங்கு பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அனுப்பர்பாளையம் :
அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பாத்திர தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் போனஸ், ஒரு வாரத்திற்கு முன் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.உலோகத்தின் அடிப்படையில் உற்பத்தியை பொறுத்து 16 சதவீதம் முதல், 18 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story






