search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு கூட்டம்"

    • இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம்
    • 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கை, வரவு, செலவு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட இந்து நாடார் சங்கத்தின் 2022-ம் ஆண்டிற் கான பொதுக் குழு கூட்டம் நாகர் கோவில் சான்றோர் நகர் ஜெக நாதன் தெருவில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் சுபாஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கையை சங்கத் தின் பொதுச் செயலா ளர் பாரத் சிங் அவர்க ளால் வாசித்து அங்கீகரிக்கப் பட்டது. 2021-2022 நிதி ஆண்டிற்கான வரவு, செல வினை சங்கப் பொருளாளர் ராஜதுரை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப் பட்டது. கூட்ட தீர்மானத் தில் காலஞ்சென்ற சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும் இந்து நாடார் வரலாறு, சமுதாய மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், தொழில் துறை மற்றும் விளையாட்டு துறைகளில் முன்னேற்றம் பெற்றிடவும், இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் ஜெயபிரம்ஆனந்த், இனச்செயலாளர் தர்மலிங் கம் என்ற உடையார், செயற் குழு உறுப்பினர்கள் ரெத்தி னாகரன், பூபதி, கனகநா தன், தமிழ்செல்வன், சுரேந்திரகுமார், முத்தரசு, சிவகுரு குற்றாலம், சுயம்பு, தங்கமுருகேசன், பாபுராஜேந்திர பிரசாத், செல்வமணி என்ற மணி, செல்வன், டாக்டர். ஹரிஹர சுதன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் சங்க துணைத் தலைவர் பொறியாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும். தி.மு.க. அரசு பதவியேற்று 15 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி, சட்டம் ஒழுங்கையும் சிறப்புடன் பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,

    மத்திய அரசின் புதிய வணிக கொள்கை சில்லறை வியாபாரத்தை ஒழித்து கார்ப்பரேட் பெருவணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முறையை கைவிட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகையும், ஊக்கமும் தந்து அவர்களை பாதுகாத்திட மத்திய அரசை கேட்டுக்கொள்வது, நாட்டில் பெருகிவரும் மது, கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழித்து ஒழுக்கமும், ஆரோக்கியமும் நிலை பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்."

    • பெருங்குறிச்சி கிராம த்தில் பீமேஸ்வரர் மற்றும் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம் மற்றும் சுள்ளிப் பாளையம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி கிராம த்தில் பீமேஸ்வரர் மற்றும் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சீட்ஸ் ஆதார நிறுவனத்தின் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பீமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பிரபாகர் முன்னிலை வைகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக பரமத்தி வட்டார வேளா ண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் திட்டத்தின் பலன்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விவசாயிகளிடையே விளக்கமாக உரையாற்றி னார்கள்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சின்னதுரை, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர் மஞ்சு, கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி, கபிலர்மலை தோட்டக்கலைத் துறை அலுவலர் சுகந்தி, தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த துரை, சீட்ஸ் ஆதார நிறுவனம் மற்றும் உதவி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம் மற்றும் சுள்ளிப் பாளையம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    ஆண்டறிக்கையை கார்த்திகா மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் வாசித்தனர்.சீட்ஸ்ஆதாரம் நிறுவனத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் விழாவை முன்னின்று நடத்தினார். முடிவில் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

    திருச்சி:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கழக அமைப்பு தேர்தல்-2022 திருச்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

    த.மு.மு.க. மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியான நெல்லை மைதீன் சேட்கான் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

    3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகளும், பொன்னம்பட்டி பேரூர் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகளும் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யபட்டு அறிவிக்கப்பட்டனர்.

    இப்ராஹிம், இம்ரான், மணவை அக்பர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேரூர் கழகம், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.
    • தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்

    மங்கலம் :

    கோவை ,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கோம்பக்காட்டு புதூர் -தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், சங்க பொருளாளர் பூபதி மற்றும் கிளை நிர்வாகிகள் ,விசைத்தறி உரிமையாளர்கள் உள்பட பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சோமனூர் விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அரசு அறிவித்துள்ள 30 சதவீதம் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு யூனிட்டிற்கு ரூ.1.40 பைசா உயர்வு என்பது ஒவ்வொரு விசைத்தறி யாளருக்கும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. எனவே கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத சூழ்நிலையில் உயர்த்திய மின் கட்டண உயர்வை அரசு சாதா விசைத்தறிகளுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் .

    வருகிற 16-8-2022ந்தேதி காலை 10 மணியளவில் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு கட்டாயம் கலந்து கொண்டு தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், அரசும் மின்வாரியமும் ,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் சாதா விசைத்தறி டேரிப்-க்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் கட்டண உயர்வை வேறு எந்த வகையிலும் செலுத்த இயலாது. ஆகவே விசைத்தறிகளை நிறுத்தி போராடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு இலவச வேட்டி,சேலை,சீருடை ரகங்களை விசைத்தறிகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும், மேலும் சாதா விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கும் அனைத்து விசைத்தறி யாளர்களும் பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • இருதரப்பினர் வாக்குவாதம் - பரபரப்பு
    • பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நாகர்கோவில் செட்டி குளத்தில் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகள் இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதையடுத்துஇன்று காலை நிர்வாககுழு உறுப்பினர்கள் அலுவல கத்திற்கு வந்தனர். அப்போது உறுப்பினர் அல்லாதவர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களையும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கு கூடி இருந்த வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிகாரி களிடமும் பேசினார்கள். உறுப்பினர்கள் மற்றும் அங்கு இருந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இரு தரப்பில் இருந்தும் ஒவ்வொருவரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் மாற்றி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை யடுத்து அங்கு குடியிருந்த நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செட்டிக்குளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரவியம் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் பட்டா நிலங்களை மாறுதல் செய்ய மறுப்பதையும், அரசு அதிகாரிகளிடம் கொடுத்த மனு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தொழில் பாதிக்கப்படுவதாக வும் கூறி தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிைறவேற்ற ஆகஸ்டு 5-ந்தேதி ஆர்ப்பா ட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.

    கலையரங்கம் முதல் அண்ணாசாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை அறவழி ப்போராட்டம் மேற்கொண்டு சிறப்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் ராஜாமுகமது, கவுரவதலைவர் சுதாகர், துணைச்செயலாளர்கள் ராஜன், ஜான்சகாயநாதன், தலைமை நிலைய செயலாளர் பிச்சை, ரவி உள்பட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கேந்தர்ய வித்யாலயா பணியாளர்களின் பேர குழந்தைகளின் சேர்க்கை முறையை அனுமதிக்கவேண்டும்.
    • கூட்டத்துக்கு பொது செயலாளர் மதுரை ராமலிங்கம் தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகளின் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கூட்டமைப்பின் சென்னை மண்டல பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பொது செயலாளர் மதுரை ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சங்கத்தின் நடைமுறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து சூலூர் பாலசுப்பிரமணியன் விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் சென்னை மண்டல பணியாளர்கள் கலந்து கொண்டு சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட கேந்தர்ய வித்யாலயா பணியாளர்களின் பேர குழந்தைகளின் சேர்க்கை முறையை அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தை நடத்த அனுமதி அளித்த சென்னை மண்டல கேந்தர்ய வித்யாலயா துணை ஆணையர் ருக்மணி மற்றும் கூட்டம் நடைபெற உறுதுணை புரிந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். 

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் கழகம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.மாநில இணைச் செயலாளர் ராஜ்மோகன், மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெறும் அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும். 2008-2009 பள்ளி க்கல்வித்துறையில் மானிய கோரிக்கையில் பள்ளிகளில் உடற்கல்வி மேம்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்.பதவி உயர்வு மூலம் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றில் பணி அமர்த்தப்படுவோருக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வர் பணியிடை மாற்றம் வழங்கும் அரசாணையை மாற்றம் செய்திட வேண்டும்.

    8,9,10 ஆம் வகுப்பில் உடற்கல்வி, உடல்நலக் கல்வி, தடகளம் விளையாட்டு மற்றும் யோகா பாடத்தை கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிறைவாக மாவட்ட தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லும்.
    • உரிமை அனுமதி பெறாமலேயே ஓபிஎஸ் காரில் வந்து வைத்திலிங்கம் பொதுக்குழுவில் பங்கேற்றார்.

    ஒற்றை தலைமை விவ காரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அபோது அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தஞ்சை மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். முதலாவதாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

    2-வதாக இந்த பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை. கூலி யாட்களை வைத்து அடியாட்களை வைத்து நடத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார். 3-வதாக கழக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.

    4-வதாக இந்த பொதுக்குழுவில் கழக அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று கூறி இருக்கிறார்.

    கடைசியாக மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று விதி 19-ல் சொல்லப்பட்டு உள்ளது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப கூட்டலாம்.

    மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒருபங்கு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டாலே பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவையில்லை. 2,665 பொதுக்குழு உறுப் பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக் குழுவை கூட்ட முடியும்.

    மேலும் அவைத்தலை வராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதில் விதி மீறல் இருப்பதாக கூறி உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்துதான் அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.

    கழக அமைப்பு தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத் துக்கு முடிவு தான் தெரிவிக்க வேண்டும். அதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மேலும் அமைப்பு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்று விதி இல்லை. அவைத்தலைவர் பதவியை மட்டுமே பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு வில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங் களை நிறைவேற்றக் கூடாது என்று தான் கோர்ட்டு கூறியுள்ளது. நாங்கள் 23 தீர்மானங்களை நிராகரித்தது கோர்ட்டு அவமதிப்பு என்று அவர்கள் கூறி வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன், ஓம் பிரகாஷ், மண்டல பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க.மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், பேச்சிமுத்து, குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து,

    மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தலைமை அலுவலக உத்தரவு படி தளவாட சாமான்கள் இயக்கம் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத குடோன் களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். 2012 பேனல் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    ×