search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுந்தப்பாடி"

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை,

    சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம்,

    சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு,

    மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம் பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17-ந் தேதி)நடக்கிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணநகர், ஜீவாநகர், ஆண்டிகுளம்,

    சொக்காரம்மன்நகர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

    • கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூன். 22-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

    அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.

    அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.

    இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.

    ×