என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "against"
- பொதுமக்கள் நகராட்சி தலைவியிடம் மனு அளித்தனர்.
- நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும் என கூறி உள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பஜார் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 1.25 ஏக்கர் அளவில் உள்ள கல்லறை பகுதியில் சுமார் 50 சென்ட் அளவில் வால்பாறை நகராட்சி மூலம் நவீன மயானம் அமைக்க சுமார் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பணிகள் தொடங்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் நவீன மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளியிடம் மனுவை வழங்கிச் சென்றனர். அந்த மனுவில் நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும். அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர், புகையால் மலை உச்சி பகுதியில் குடியிருப்புகளில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் நவீன மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி உள்ளனர்.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற் றோர் நலச்சங்க தலைவர் வை. பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் நிர்வாகம் சட்டத் தில் உள்ள ஓட்டைகளை வைத்து தனியார் மருத்துவ கல்லூரி யில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 4 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பாமல் உள்ளது.
மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்கைக்கு கடைசி நாளாக அறி விக்க ப்பட்ட அக்.25-ந் தேதிக்குள் (இன்று) கலந்தாய்வினை நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே 3 கட்ட கலந் தாய்வு நடைபெற்ற நிலையில் 4-ம் கட்ட சிறப்பு கலந்தாய்வுக்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியிடம் அனுமதி பெற்று சென்டாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண் டும். அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.
எனவே, இன்றுக்குள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் காலியாக உள்ள 4 இடங்களை சென்டாக் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்மந்தமாக பல பேர் புகார் அளித்தும் சென்டாக் அதிகாரி கள் ஒருமையில் மாணவர்க ளையும், பெற்றோர் அமைப்புகளையும் பேசி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறல் நடந்துள்ளது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித் துள்ளது. எனவே, தவறு செய்த அதிகா ரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் புதுவை அரசு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
- பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வரும் பெண்ணும், எம்.எஸ்.சி. படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த அகமத் என்ற மாணவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமத் அவரது இன்ஸ்டாகிராமில் அந்த மாணவியுடன் எவ்வாறெல்லாம் பழகினார் என்பது குறித்து தவறான தகவல்களை பரப்பி உள்ளார்.
இதுகுறித்து புதுவை நீதிமன்றத்தில் அந்த மாணவி வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலாப்பட்டு போலீசார் மாணவர் அகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
- அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
சேலம்:
சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
கோவை,
கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக காளீஸ்வரி (வயது 49) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ரோந்து வாகனத்தில் டாடாபாத் மின்வாரிய அலுவலகம் வழியாக ரோந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த திருநங்ககைள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி பிச்சை எடுக்க கூடாது என திருநங்ககைளிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நித்யா உள்பட 10 திருநங்ககைள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
- 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு:
சுதந்திர தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின மான நேற்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்ப டுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்கப்படுகிறதா? என பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வானது ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் நடத்தப்பட்டது.
இதில் 88 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள ர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மாற்று விடுப்பு வழங்காமலும் விடுமுறை நாளில் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் பட்டியலை 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமலும் அதன் நகலை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது.
உடனடியாக சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
- நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது.
- ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
நெல்லை:
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்க துறை ராகுல் காந்தியை சுமார் 54 மணி நேரமாக விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இன்று 2-வது நாளாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டித்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு அற வழி போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏற்கனவே ராகுல் காந்தியை 5 முறை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்று 2-வது நாளாக சோனியா காந்தியையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி விட்டு இது போன்ற செயல்களை செய்து வருகிறது.
ஏற்கனவே கோர்ட்டு சோனியா காந்தி மீது தவறு இல்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அதிகளவு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தின் போது கவுன்சிலர்கள் அனுராதா சங்கர பாண்டியன், அம்பிகா மற்றும் பொதுச் செயலாளர் சொக்க லிங்க குமார், உதயகுமார், வெள்ள பாண்டி, மாவட்ட துணை தலைவர் கவிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி கவுன்சிலர் சூரம்பட்டிஜெகதீஷ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் கேச வமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் சேர்மன், மாணவரணி பொருளாளர் முருகானந்தம், 46 புதூர் தலைவர் பிரகாஷ், நிர்வாகி துரைசேவுகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், சூரம்பட்டி தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதர மூர்த்தி, ஐடி விங் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில்
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.
இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.
அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.