search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விதி மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    விதி மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற் றோர் நலச்சங்க தலைவர் வை. பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் நிர்வாகம் சட்டத் தில் உள்ள ஓட்டைகளை வைத்து தனியார் மருத்துவ கல்லூரி யில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 4 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பாமல் உள்ளது.

    மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்கைக்கு கடைசி நாளாக அறி விக்க ப்பட்ட அக்.25-ந் தேதிக்குள் (இன்று) கலந்தாய்வினை நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே 3 கட்ட கலந் தாய்வு நடைபெற்ற நிலையில் 4-ம் கட்ட சிறப்பு கலந்தாய்வுக்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியிடம் அனுமதி பெற்று சென்டாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண் டும். அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை முறைப்படி செய்யாமல் தவறுக்கு வித்திட்டாலும், அது குற்றம் புரிந்ததற்கு சமமாகும்.

    எனவே, இன்றுக்குள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் காலியாக உள்ள 4 இடங்களை சென்டாக் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது சம்மந்தமாக பல பேர் புகார் அளித்தும் சென்டாக் அதிகாரி கள் ஒருமையில் மாணவர்க ளையும், பெற்றோர் அமைப்புகளையும் பேசி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறல் நடந்துள்ளது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித் துள்ளது. எனவே, தவறு செய்த அதிகா ரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் புதுவை அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    Next Story
    ×