என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் பொதுக்குழு கூட்டம்
- கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
- சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரவியம் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
கொடைக்கானல் வட்டாட்சியர் பட்டா நிலங்களை மாறுதல் செய்ய மறுப்பதையும், அரசு அதிகாரிகளிடம் கொடுத்த மனு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தொழில் பாதிக்கப்படுவதாக வும் கூறி தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிைறவேற்ற ஆகஸ்டு 5-ந்தேதி ஆர்ப்பா ட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.
கலையரங்கம் முதல் அண்ணாசாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை அறவழி ப்போராட்டம் மேற்கொண்டு சிறப்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் ராஜாமுகமது, கவுரவதலைவர் சுதாகர், துணைச்செயலாளர்கள் ராஜன், ஜான்சகாயநாதன், தலைமை நிலைய செயலாளர் பிச்சை, ரவி உள்பட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






