search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாவு"

    • இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சீரங்காயி (52).

    கடந்த 1-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பி.கே.வலசு குமரப்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தனர்.

    இதேபோல் சம்பவத்தன்று சீரங்காயி தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சீரங்காயி பாம்பு.. பாம்பு.. என்று கத்தினார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சீரங்காயி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேட்டவலம்:

    வேட்டவலம் அடுத்த சின்ன ஓலைப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 59), தொழி லாளி. இவரது மனைவி ரேவதி (45). இவர்களது பேரன் தயாநிதி.

    ரேவதிக்கும், தயாநிதி க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை ஏழுமலை மோட் டார் சைக்கிளில் ஆவூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    சிகிச்சை முடிந்து சின்ன ஓலைப்பாடி கிராமத்திற்கு திரும்பினர். சின்ன ஓலைப்பாடி கூட்ரோடு வளைவில் திரும் பிய போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஏழுமலை ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதில் ஏழுமலை, ரேவதி, தயாநிதி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் ரேவதி பலத்த காயமடைந்து சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூங்கொடி (வயது 39) .இவர் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றபோது, குறுக்கில் மாடு ஒன்று வந்ததால், தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் .மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்த பூங்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்தார்,
    • தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார்.,

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சங்கிலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி பூங்கொடி (வயது39) . நேற்று பிற்பகல் இவருடைய தம்பி தேவதாசன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தவாறு எதப்பட்டு கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். செக்கடிக்குப்பம் அருகே சென்றபோது குறுக்கில் மாடு ஒன்று வந்துள்ளது. அப்போது தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி பின்னால் உட்கார்ந்திருந்த பூங்கொடி கீழே விழுந்தார்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டை காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மங்களம் (வயது 46). இவர் அந்த பகுதியில் தங்கி ஒரு தனியார் கம்பெனி யில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
    • வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், கம்ைபநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி குஞ்சம்மாள் (வயது52). இவர் நேற்று உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனை பார்த்து பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்த கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த லாலா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி கவிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இதேபோல ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மதிகோன்பாளையம் போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த விராலிமெடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பவளக்கொடி (52). இவர்களுக்கு ராதா என்ற மகள் உள்ளார்.

    ராதாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி- பவளக்கொடி இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக பவளக்கொடியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பவளக்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள நடுப்பட்டி, புலவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தாமணி (வயது 55). பழனிச்சாமி கடந்த 40 வருடங்களாக விஜயமங்கலம் அருகே உள்ள கள்ளியம் புதூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சாந்தாமணிக்கு அடிக்கடி முழங்கால், மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மதியம் விஜயமங்கலம் பகுதியில் உள்ள மொடவாண்டி குட்டையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது.

    இதனையடுத்து அங்கு வந்த பழனிச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மேலே எடுத்துப் பார்த்தபோது அது இறந்து போன தனது மனைவி சாந்தாமணி என தெரிய வந்தது.

    பின்னர் சாந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கொத்தமங்கலம் ரோடு, கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி எட்வின் குயின் (வயது 35). இவர் கடந்த 15-ந் தேதி கப்பியாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்ள இவருடைய மைத்துனர் அறிவழகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். 

    அவர்கள் லட்சுமிபுரம், ஒரத்தூர், வழியாக முண்டியம்பாக்கம் அருகே உள்ள ெரயில்வே கேட் அருகே செல்லும் பொழுது பின்னால் வந்த டாரஸ் லாரி எட்வின் குயின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு எட்வின் குயினுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரி ன்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த எட்வின் குயினுக்கு வெற்றிச்செல்வி, கீர்த்தனா, ப்ரீத்தி வரலட்சுமி, என்ற 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
    • அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.

    நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி விபத்து
    • கன்னியாகுமரியை சேர்ந்தவர்

    வந்தவாசி:

    கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டத்துக்குட்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை போவாஸ் . இவரது மனைவி அஜந்தா (வயது 48). இவர் வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பார்க்க கன்னியாகுமரியில் இருந்து பஸ்சில் மேல்மருவத்தூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அவரை அங்கிருந்து மருமகன் ரமேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜந்தா நிலைத்தடு மாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அடுத்துள்ள ராமசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி பாரதி (வயது29). இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பதறி போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×