என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மயங்கி விழுந்து பெண் சாவு
  X

  மயங்கி விழுந்து பெண் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
  • அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்

  ஈரோடு,

  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

  இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.

  நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×