search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாவு"

    • அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது.
    • இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மனைவி மஞ்சு (வயது 45). இவர் நேற்று வீட்டின் முன்பு நடந்து சென்றார்.

    அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மஞ்சுவின் மீட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நடுப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதன். இவரது மனைவி அமுதா (வயது30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அமுதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • உடனடியாக சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமன். கூலித்தொழிலாளியான இவருக்கு சந்திரா (வயது47) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சந்திரா சம்பவத்தன்று தொட்ட லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்திரா வரும் வழியில் இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர்.

    • செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், செம்பரம்முத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி தாரா (வயது42). இவர் கடந்த 3-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அவரது காலில் பாம்பு கடித்தது.
    • சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி அம்மன்கோவில் புதூரை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி ருக்மணி (68). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று சென்னிமலையை அடுத்துள்ள நொய்யல் கிராமத்தில் நடக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோவில் புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக அவர் வீட்டில் இருந்து சென்றார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி நீராசிலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது54). சம்பவத்தன்று அருந்ததியர் காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது சீதாலட்சுமியை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகன் பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். மகள் 11-ம் வகுப்பு முடித்து விட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி கபடி பயிற்சிக்கு சென்று வந்த மகளிடம் இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.

    அதற்கு அவரது மகன் தன் தாய் லட்சுமியிடம், தங்கை விருப்பப்படி கபடி பயிற்சிக்கு போகட்டும் என கூறினார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா போட்டிருந்தார்.
    • அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் சிக்கி கொண்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது35). கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொப்பூரில் உள்ள கெங்களாபுரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர்.

    கடை முன்பு மின்சாரத்தால் இயங்கக்கூடிய கரும்பு சாறு பிழியும் எந்திரம் உள்ளது. அதில் கரும்பு ஜூஸ் போட்டு விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அனிதா வழக்கம்போல் கடையில் கரும்பு சாறு பிழியும் எந்திரம் முன்பு நின்று கரும்பு சாறு பிழித்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா போட்டிருந்தார்.

    அப்ேபாது அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதில் அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சு விடமால் திணறினார்.

    உடனே அவரது கணவர் பிரபு ஓடிவந்து எந்திரத்தின் மின்சாரத்தை துண்டித்தார். பின்னர் அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரபு தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசன் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றார்.

    • வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 31).

    இவரும் அவரது உறவினரான அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது பின்னால் வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். செல்வத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இரு–வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே லட்சுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். செல்வத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர். 

    • தெலுங்கு வருடபிறப்பையொட்டி கோமதி வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது
    • சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பழனிவேல் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி-ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் கோமதி (வயது 27). இவருக்கும் தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த நித்யகந்தன் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கடந்த மாதம் 22-ந் தேதி தெலுங்கு வருடபிறப்பையொட்டி கோமதி வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. உடனே அந்த தீயை உடல் பரவியது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். உடனே உறவினர்கள் ஓடிவந்து அந்த தீயை அணைத்து கோமதி மீட்டு சிகிச்சை்ககாக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் அங்கு விரைந்து கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்தபோது உடையில் தீப்பிடித்தது
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வெள்ளிச் சந்தை அருகே உள்ள முட்டம் ஓடை தெருவை சேர்ந்தவர் புருனோ, மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய ரோஸ் (வயது 57). சம்பவத்தன்று மதியம் மரிய ரோஸ் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீப்பிடித்தது. இதனால் அலறி துடித்த அவர் கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் தீக்காயம் அடைந்த மரியரோசை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரிய ரோஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளிச் சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். மரியரோசின் 2 மகள்களும் திருமணமாகி கோவளம் மற்றும் முட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    • வீட்டில் மண்ண்ணெணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பெங்காளி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாதம்மாள் (வயது 55). கடந்த 24-ந் தேதி இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாதம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×