பாம்பு கடித்து பெண் சாவு

ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாம்பு கடித்து பெண் சாவு
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி நீராசிலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது54). சம்பவத்தன்று அருந்ததியர் காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது சீதாலட்சுமியை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com