search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாவு"

    • வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அருக்காணி(62). இவரது மகன் வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தனது தாய் அருக்காணியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேலுவின் தாயார் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை,

    ஆற்காடு அருகே தாழனூர் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது 39).கண்பார்வை குறைபாடு உடையவர் என கூறப்படுகிறது.

    வீட்டின் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க மகேஸ்வரி சென்றார்.

    அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆதிபில்டர்ஸ், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (44). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேனகா உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் கட்டிலில் படுத்திருந்த மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

    அதைக்கண்ட அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மேனகாவை மீட்டு பெருதுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது.
    • ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜோதி (வயது55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்

    இந்த நிலையில் ஜோதி சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாரப்பட்டிக்கு சென்றார். அப்போது ஜோதியின் மகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடையை விரித்தபோது பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 50), தொழிலாளி.

    இவரது மனைவி சுகுணா (45). வீரமணி மற்றும் சுகுணா ஆகியோர் நேற்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பைக் வீரமணி ஓட்ட, சுகுணா பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார்.

    பொன்னேரி அருகே சென்ற போது லேசான தூரல் மழை பெய்தது. அப்போது சுகுணா, கையில் வைத்திருந்த குடையை விரித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

    அவரை வீரமணி மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகுணா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
    • முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் கவிராஜ். இவரது மனைவி கவிதா (வயது48). இவரது மகன் விக்னேஷ். இந்த நிலையில் கவிதாவின் தாய் வீடு ஒட்டப்பட்டியில் உள்ளது.

    தனது தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழகம் அருகில் வந்த போது முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கவிதா சாலையில் விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவிதா உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்
    • அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நேற்று ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், கஸ்பா பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி லலிதா (வயது 58).

    கடந்த மாதம் 16-ந் தேதி லலிதா வீட்டில் தீபம் ஏற்றுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. லலிதா வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து லலிதா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரி. கூலித்தொழிலாளியான இவரது கணவர் முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மாரி தனது தாயுடன் வசித்துவந்தார். அப்போது அவரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாரி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சபரிநாயகனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட அஜிதா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அம்பேத். இவருடைய மகள் அஜிதா (வயது29). இவர் எம்.எஸ்.சி, பி.எட் முடித்து ள்ளார்.

    இந்நிலையில் கடந்த 6-வருடங்களுக்கு முன்பு கடத்தூர் பகுதியை சேர்ந்த சபரிநாயகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சபரிநாயகன் டீக்கடை யில் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழ க்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 25-ம் தேதி சபரி நாயகன் குடிபோதையில் இருந்ததால் கணவன்-மனைவி இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அஜிதா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அஜிதாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி 6- வருடங்கள் ஆகியுள்ள தால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது.

    • விஷ பாம்பு ஒன்று மீனா வை கடித்துள்ளது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போபனபள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரதுமனைவி மீனா (வயது26).இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அன்று மீனா வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவை சேர்ந்தவர் பாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(வயது35). இவர் நேற்று மாலை அட்டப்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீது மோதியது. அதே வேகத்தில் கார் ரோட்டில் இருந்து வயலில் புகுந்தது.



    பலியான செல்லம்மாள்

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மேலூர் ராஜேந்தி ரன் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வேனில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு வேனில் விஜய குமார் மற்றும் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். வேனை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே மாடு சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பஸ் நிறுத்தம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்கள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் விஜயகுமார், வெங்கடேஷ், பால்ராஜ் மற்றும் பெண்கள் என 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×