search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl dies"

    • ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.
    • அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு கொட்டச்சேடு, அயோத்தியாப்பட்டணம் வழியாக கீழே இறங்கினர். அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.

    • பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.
    • கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த குமார். இவரது மனைவி பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது. அங்கு மயங்கிய நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூஞ்சோலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அருக்காணி(62). இவரது மகன் வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தனது தாய் அருக்காணியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேலுவின் தாயார் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவை சேர்ந்தவர் பாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(வயது35). இவர் நேற்று மாலை அட்டப்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீது மோதியது. அதே வேகத்தில் கார் ரோட்டில் இருந்து வயலில் புகுந்தது.



    பலியான செல்லம்மாள்

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மேலூர் ராஜேந்தி ரன் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வேனில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு வேனில் விஜய குமார் மற்றும் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். வேனை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே மாடு சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பஸ் நிறுத்தம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்கள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் விஜயகுமார், வெங்கடேஷ், பால்ராஜ் மற்றும் பெண்கள் என 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன்.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 27-ந் தேதி சாதனா வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது அவரது பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலைமையில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சத்தியபிரியா(வயது22).

    இவர்களுக்கு 2½ வயதில் சுபிக்ஷா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

    பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார். அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறும், தான் நடந்து வருவதாகவும் கூறியது. இருப்பினும் தாய் இறக்கி விட மறுத்தார்.

    ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.

    இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியான சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த கிளினிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தை பார்த்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் ெகாண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.

    அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் கருணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகன் கீர்த்திவாசன் (வயது 22). இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்து கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீர்த்தி வாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல சேலம் சுக்கம்பட்டி வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி பவுனம்மாள் ( 55). இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு சின்னானூர் அருகே வந்தபோது துரைசாமி திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதில் பவுனம்மாள் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமதுரை அருகே விஷ பூச்சி கடித்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வடமதுரை:

    வடமதுைர அருகே புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பால்காளை. கூலித்தொழிலாளி. இவரது மகள் காவியதர்ஷிணி (வயது 3). இவர் அருகில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது விஷ பூச்சி கடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காவியதர்ஷிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுசிதரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சஞ்சனா (வயது 5).

    இவர் கடந்த 3 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சஞ்சனாவை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது சிறுமியில் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிக காய்ச்சல் காரணமாக அவர் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சஞ்சனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டில் 4 நாட்களாக மகள் பிணத்துடன் வசித்து வந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் குமாரசாமி நகர் குறுக்குத்தெரு முதல் தெருவை சேர்ந்தவர் ராஜா மணி (எ) கணேசன். இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு சபீதா (21) என்ற மகள் உள்ளார். ராஜாமணி இறந்து விட்டார். இதனால் பத்மாவதி தனது மகளுடன் வசித்து வந்தார். சபீதாவுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபீதா இறந்துவிட்டார். இறந்த சபீதா உடலை அடக்கம் செய்யாமல் அவரது தாய் பத்மாவதி உடல் அருகேயே இருந்துள்ளார். 4 நாட்களாக அந்த உடலை வீட்டிலேயே வைத்து அன்றாட வேலையை கவனித்து வந்தாராம். இதனிடையே இன்று காலை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பத்மாவதியின் வீட்டை பார்த்தபோது அங்கு அழுகும் நிலையில் சபீதா உடல் கிடப்பதையும், பத்மாவதி அங்குள்ள ஒரு மூலையில் அமர்ந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சபீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் பத்மாவதி மனநலம் பாதித்தவர் என்றும், மகள் இறந்ததை அறியாமல் அவர் மகள் உடலுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. சபீதா உடல் நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லாவர்சன். இவர் கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள சஞ்சிவாடியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் ஹாசினி (வயது 5). இவர் கடந்த 15 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக லாவர்சன் தனது மகளை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹாசினிக்கு காய்ச்சல் அதிகமாகி மயங்கினார். இதனை பார்த்த லாவர்சன் தனது மகளை கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஹாசினி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×