பாம்பு கடித்து பெண் சாவு

பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார். கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது.
பாம்பு கடித்து பெண் சாவு
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த குமார். இவரது மனைவி பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது. அங்கு மயங்கிய நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூஞ்சோலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com