மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
Published on

சேலம்:

சேலம் கோரிமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு கொட்டச்சேடு, அயோத்தியாப்பட்டணம் வழியாக கீழே இறங்கினர். அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com