பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாப சாவு

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார். சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாப சாவு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.

அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com