லாரி மோதி பெண் சாவு

வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரி மோதி பெண் சாவு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அருக்காணி(62). இவரது மகன் வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தனது தாய் அருக்காணியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேலுவின் தாயார் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com