கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆதிபில்டர்ஸ், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (44). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேனகா உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் கட்டிலில் படுத்திருந்த மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

அதைக்கண்ட அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மேனகாவை மீட்டு பெருதுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com