என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த பெண் சாவு
- மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது.
- ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜோதி (வயது55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்
இந்த நிலையில் ஜோதி சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாரப்பட்டிக்கு சென்றார். அப்போது ஜோதியின் மகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அங்குள்ள பட்டுகூடு விற்பனை செய்யும் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென்று முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் ஜோதி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






