search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி மாத வழிபாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் பெருமைகள் வந்து சேரும்.
    • நல்ல வாழ்க்கையும் அமைகின்றது.

    ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வந்து கொண்டே தான் இருக்கிறது.

    அப்பொழுதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னிதிக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம்.

    அதுமட்டுமல்லாமல் 'சனி பிடிக்காத தெய்வம்' என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம்.

    ஆதியந்தப்பிரபு வழிபாடும் ஆனந்த வாழ்வை வழங்கும்.

    ஆனால் மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை புனிதமான சனிக்கிழமையாகக் கருதப்படுகிறது.

    அன்றைய தினம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

    அலங்காரப் பிரியர் விஷ்ணு என்பதால் பச்சைப் பட்டும், வாசமலரும் அணிவித்தால் பணவரவு திருப்தி தரும்.

    குறிப்பாக செட்டி நாட்டுப் பகுதிகளில் ராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து ராமாயணம் படிப்பது வழக்கம்.

    கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கிறார்கள்.

    இங்ஙனம் ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்பவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது.

    நல்ல வாழ்க்கையும் அமைகின்றது.

    எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு நேரமேனும் விரதமிருந்து அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று

    பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால் பெருமைகள் வந்து சேரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயணசுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள்,

    புதுக்கோட்டை மாவட்டம் செவ்வூரில் உள்ள ரோட்டுப் பெருமாள் கோவில், முதலைப்பட்டியில் உள்ள விஷ்ணு ஆலயங்களில்

    புரட்டாசி சனிக்கிழமை அன்று சென்று வழிபட்டவர்களுக்கு பொருள் வளம் பெருகி பொன்னான வாழ்க்கை அமையும்.

    இதுபோல அவரவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு புரட்டாசி சனிக்கிழமை சென்று லட்சுமி சமேத விஷ்ணுவையும், மாருதியையும் வழிபட்டால் மன மகிழ்ச்சி நிலைக்கும்.

    • காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.
    • தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

    நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணெய் உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

    காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.

    ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.

    இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது.

    அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது.

    சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன.

    அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார்.

    சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணெய்யில் ஊறிய உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது.

    தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

    இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது.

    ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.

    அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணெய்யை (நல்லெண்ணெய் வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் குளிக்க வேண்டும்.

    அதனால்தான் நமது முன்னோர்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் வைத்து குளிக்கும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர்.

    • கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவான் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
    • அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவான் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

    இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.

    சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி பகவான் அமர்ந்தார்.

    இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனி பகவானின் தலைமீது வைத்தார்.

    பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி பகவான், தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே,

    என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி பகவான்.

    அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    • பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.
    • எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்

    • சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
    • துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

    இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    • இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
    • துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.

    புரட்டாசி சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து,

    அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.

    இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

    துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.

    பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.

    பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது.

    அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.

    வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    • வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் சித்தி விநாயக விரதம்.
    • வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் தூர்வாஷ்டமி விரதம்.

    சித்தி விநாயக விரதம்!

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் இது. தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல் - உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.

    அன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும் சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இதனால், காரியத் தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும். கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

    தூர்வாஷ்டமி விரதம்!

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அருகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    புரட்டாசி பவுர்ணமி!

    ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்க ளைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

    அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பவுர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.

    ஞான கவுரியை வழிபடுவோம்!

    கவுரி என்ற திருநாமம் அம்பாளைக் குறிப்பது. கிரிகுலங் களின் அரசியான தேவியை கவுரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவது, உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். வீட்டில் ஸ்ரீகவுரிதேவியை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னிப் பெண்கள் கவுரி தேவியை வழிபடுவதால், அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான். கவுரி தேவியை சோடச கவுரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள்.

    ஞான கவுரி, அமிர்த கவுரி, சுமித்ர கவுரி, சம்பத் கவுரி, யோக கவுரி, வஜ்ர ச்ருங்கல கவுரி, த்ரைலோக்ய மோஹன கவுரி, சுயம்வர கவுரி, கஜ கவுரி, கீர்த்தி கவுரி, சத்யவீர கவுரி, வரதான கவுரி, ஐஸ்வர்ய மகா கவுரி, சாம்ராஜ்ய மகா கவுரி, அசோக கவுரி, விஸ்வ புஜா மகா கவுரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன. இந்த தேவியரில் ஸ்ரீஞான கவுரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால், தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றி பெறும்.

    வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் வழிபடுவார்கள். நாமும் புரட்டாசியில் இந்த அம்பிகையை வழிபட்டு, அளவில்லா ஞானமும் செல்வமும் பெற்று மகிழ்வோம்.

    நவகிரக நாயகியாகத் திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல், சந்திர மண்டலத்தில் அமிர்த கவுரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கவுரியாகவும், புத மண்டலத்தில் ஸ்வர்ண கவுரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கவுரி யாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கவுரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசு வர கவுரியாகவும் திகழ்கிறாளாம்.

    அவ்வகையில் குரு மண்ட லத்தில் அன்னை ஞான கவுரியாக அருள்பாலிக்கிறாள். ஆகவே, இந்தத் தேவியை அனுதினமும் வழிபட்டு வந்தால், ஞானத்தையும், திருமணப் பேற்றையும், நல்வாழ்வையும் தருவாள்.

    மகாலட்சுமி விரதம்!

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    கண்ணன் சொன்ன அனந்த விரதம்!

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம். விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

    அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள். மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.

    கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.

    ×