search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள் விழா"

    • கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பில் நடந்தது
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அழைப்பு

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பில் வைத்து எனது தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    விஜய்வசந்த் எம்.பி., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், கேரளா மாநில பொதுச்செய லாளரும், பேச்சாளருமான மரியாபுரம் ஸ்ரீகுமார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் அப்பச்சி சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு பேரூ ராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மற்றும் துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகி கள், காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூ ராட்சி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனை வரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
    • சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் அகில இந்திய பொது செயலாளரும், முன்னால் எம்.எல்.ஏ. என்.புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இளையப்பன் மற்றும் சத்தியசீலன், சங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி இளைஞரணி தலைமையில் நடிகர் விஜய்யின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    முன்னதாக இவ்விழாவில் சிவம்பட்டி ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து சிவம்பட்டி அரசு தொடக்கக் கல்வி மாணவ, மாணவியர் 200 பேருக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள் உப கரணங்கள் வழங்கப்பட்டது.

    அத்துடன் மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் சிவம்பட்டி, மத்தூர், களர்பதி, கிருஷ்ணாவரம் உள்ளிட்ட பகுதிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன், சக்தி, சத்தியன், அருள்குமார, அருண்குமார், தளபதி பாஸ்கரன், விஜயரங்கன், சாம்ராஜ், லோகேஷ், வினோத், இளவரசன், சாரதி, பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், பால்கனி, ஜாபர், டைகர் சம்சுதீன், ரவிராஜா, சக்தி, வெங்கட்ராமன், வாசுதேவா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான

    ஆர்.சங்கர்கணேஷ் செய்திருந்தார்.

    • கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். நகர தலைவர் லலித் ஆண்டனி, மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், டாக்டர் தகி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல பேரவை மாவட்ட தலைவர் குட்டி என்கிற விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஷாநவாஸ், ஹாஜித் பாஷா, சதாம், அஜிசுல்லா உள்பட பலர் கலந்து

    கொண்டனர்.

    • ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அருணாசலம், முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

    இவ்விழாவில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் பொன் பிரகாசம், மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுக்குழு சின்னத்தம்பி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர் முருகன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி அனை வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற தொகுதி எஸ்.சி.பிரிவு செயலாளர் தேவராஜன், மொரப்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி மணி, கட்சி நிர்வாகிகள் கைலாசம், நாகேந்திரன், மோகன், தங்கராஜ், பூபதி ராஜா, சதானந்தன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
    • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

    காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
    • கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அதிமுக ஒன்றியம் சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ரவர்த்தி, தேவராசன், வேடி, வேங்கன் மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், துணைத் தலைவர் கனகராஜ், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ஊத்தங்கரை நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய தேவேந்திரன் முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முரளி பிரசாத், ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, இளம் பாசறை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தமிழர்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில், பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடந்தது.

    இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், பிரியாணி விருந்தை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராசன், சித்ரா சந்திரசேகர், தி.மு.க நிர்வாகிகள் ரியாஸ், கராமத், நகராட்சி கவுன்சிலர்கள் சந்தோஷ், ஜெயக்குமார், வேலுமணி, பழனி, பரந்தாமன், செந்தில்குமார், மதன்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், பேரூர் அவை தலைவர் திரவியம், சுந்தரபாண்டி, மணி, கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலலமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் அன்பரசன், மதியழகன், நிர்வாகிகள் கடரலசுமூர்த்தி, திருமலைச்செல்வன், மோதிலால், டேம் பிரகாஷ், ஜமுனா புருஷோத்தமன், கேபிள் சரவணன், ராஜசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜ ரத்தினம் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் கேட்சன், குளச்சல் சட்டமன்ற பார்வையாளர் அருண், துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சற்குரு கண்ணன், லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், பிராங்கி ளின், பாபு, ரமேஷ்பாபு, செல்வம், சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தொழில் முதலீட்டை பெருக்குகின்ற வகையில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய மேலை நாடுகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி வருகை தரவுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார வாழ்த்துவது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை வருகிற 3-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் 3-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம் பகுதி களில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள், ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்குதல், நோட்டுப்புத்தகம், எழுது பொருள் வழங்குதல், கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பட்டி மன்ற கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டிகளை நடத்துவது. நூற்றாண்டு விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 3-ந்தேதி குமரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழகங்களிலும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை விரிவுபடுத்தி புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்ப்பது, ஜூன் 3-ந்தேதி சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜவகர், துரை, ஜீவா மற்றும் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்த நாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
    • ”வாழப் பழகலாம் வாங்க” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழில திபா் அமரா் என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

    முதல்நாள் நிகழ்வாக, என்.ஆா்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தில் செந்த மிழ்ச்சுடா் சிவக்குமாா் "வாழப் பழகலாம் வாங்க" என்னும் தலைப்பில் சொ ற்பொழிவாற்றினாா்.

    2-ம் நாள் விழா மதுரை ரோட்டில் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள "சாந்தி ஸ்தல்" நினைவுப் பூங்காவில் நடை பெற்றன. காலை நிகழ்ச்சி யில், மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா நிறுவனரது நினை வாலயத்தில் மாலைகள் அணிவித்து மலா்களால் வழிபாடு செய்தாா். மேலும், நினைவுப்பூங்காவைப் பராமரித்துவரும் ஊழியா்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினாா். தொடா்ந்து ஸ்ரீவில்லி புத்தூா் ஸ்திரிரத்னா கலைவளர்மணி உமா சந்திரசேகா் மற்றும் குழுவினரின் கீா்த்தனாஞ்ஜலி நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், கடையநல்லூா் முனைவா் சங்கர நாரா யணன் வீணை இசையால் நிறுவனருக்கு வீணாஞ்ஜலி செலுத்தினாா். ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிாியா் நல்லா சிாியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டதாாி உதவித் தலைமை ஆசிாியா் இளையபெருமாள் நன்றி கூறினாா். தமிழாசி ரியர் பிரான்சிஸ் அருள்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    ×