என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பிறந்த நாள் விழா
- கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
- முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், பேரூர் அவை தலைவர் திரவியம், சுந்தரபாண்டி, மணி, கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story






