search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாட வேண்டும்
    X

    கருணாநிதி பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாட வேண்டும்

    • தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜ ரத்தினம் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் கேட்சன், குளச்சல் சட்டமன்ற பார்வையாளர் அருண், துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சற்குரு கண்ணன், லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், பிராங்கி ளின், பாபு, ரமேஷ்பாபு, செல்வம், சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தொழில் முதலீட்டை பெருக்குகின்ற வகையில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய மேலை நாடுகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி வருகை தரவுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார வாழ்த்துவது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை வருகிற 3-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் 3-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம் பகுதி களில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள், ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்குதல், நோட்டுப்புத்தகம், எழுது பொருள் வழங்குதல், கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பட்டி மன்ற கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டிகளை நடத்துவது. நூற்றாண்டு விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 3-ந்தேதி குமரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழகங்களிலும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை விரிவுபடுத்தி புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்ப்பது, ஜூன் 3-ந்தேதி சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜவகர், துரை, ஜீவா மற்றும் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×