என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா
    X

    பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்ட காட்சி.

    கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

    • கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். நகர தலைவர் லலித் ஆண்டனி, மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், டாக்டர் தகி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல பேரவை மாவட்ட தலைவர் குட்டி என்கிற விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஷாநவாஸ், ஹாஜித் பாஷா, சதாம், அஜிசுல்லா உள்பட பலர் கலந்து

    கொண்டனர்.

    Next Story
    ×