search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி இசட் போல்டு 4"

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது. #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.

    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iPhoneXS #AppleWatch



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

    இம்முறை 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்ட ஐபோன்களின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இவை ஐபோன் XS என அழைக்கப்படலாம் என்றும் இவை புதிதாக தங்க நிற ஆப்ஷன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி அனைத்து ஐபோன் மாடல்களிலும் நாட்ச், ஃபேஸ் ஐடி சார்ந்த ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஏ12 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.



    புதிய ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய வாட்ச் மாடல்களில் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய வாட்ச் சீரிஸ் 3 மாடல்களை விட 15% பெரியதாகவும், டிஸ்ப்ளேவை சுற்றி மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் அதிக விவரங்களை கொண்ட புதிய ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அனலாக் ஃபேஸ் நேரத்தை சுற்றி மொத்தம் எட்டு விவரங்களை காண்பிக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சைடு பட்டன் மற்றும் டிஜிட்டர் கிரவுன் இடையே புதிய ஓட்டை காணப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டாவது மைக்ரோபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.



    இத்துடன் புதிய டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைடு பட்டன் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 சார்ந்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி விடும்.

    செப்டம்பர் 12 ஆப்பிள் விழாவில் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 4, ஆப்பிள் ஏர்பவர், ஏர்பாட்ஸ் 2 உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXS #AppleWatch

    புகைப்படம் நன்றி: 9to5mac
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. புதிய விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyJ4



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஜெ4 விலை ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    மேக் ஃபார் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போனில் ஆப் பேர், அட்வான்ஸ்டு மெமரி மேனேஜ்மென்ட், அடாப்டிவ் வைபை மற்றும் சாம்சங் மால் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் சூப்பர் AMOLED 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் சாம்சங்-இன் எக்சைனோஸ் 7570 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. ஆன்ட்ராய்டு 8.0 சார்ந்த எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
    - மாலி-T720 MP1
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    கடந்த வாரம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. ரூ.34,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடலில் 6.3 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டிருக்கிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
    ஐபால் நிறுவனத்தின் ஆசான் 4 ஃபீச்சர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபைல் போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #mobilephones


    ஐபால் நிறுவனம் தனது ஆசான் சீரிஸ் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆசான் 4 என அழைக்கப்படும் புதிய மொபைல் போன் பெரிய திரை கொண்டிருப்பதால் முதியோருக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும் என ஐபால் தெரிவித்துள்ளது.

    பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி மற்றும் டாக்கிங் கீபேட் உள்ளிட்டவை புதிய மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொபைல் வைத்திருப்போர் தவிர மற்றவர்கள் இதில் தங்களது சிம் கார்டை செருகினால் ஏற்கனவே மொபைலில் செட் செய்யப்பட்டு இருக்கும் மொபைலுக்கு எச்சரிக்கை செய்யும்.



    ஐபால் ஆசான் 4 அம்சங்கள்:

    – 2.31 இன்ச் டிஸ்ப்ளே
    – பெரிய பட்டன் கொண் கீபேட்
    – பிரெய்லி மற்றும் டாக்கிங் (பேசும்) கீபேட்
    – எஸ்.ஓ.எஸ். அம்சம்
    – டூயல் சிம் ஸ்லாட்
    – மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி வரை மெமரி
    – எஃப்.எம். ரேடியோ
    – 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைவூட்டும் படி மெடிசின் ரிமைன்டர் வசதி சிறப்பான ஆடியோ தரம் இருப்பதால் காது கேட்பதில் சிறு கோளாறு இருப்பவர்களுக்கும் தெளிவாக கேட்க செய்யும் வகையில் ஹியரிங் ஏய்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பத்து இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் ரூ.3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Aasaan4 #mobilephones
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyTab



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய டேப்லெட்டில் சாம்சங் கைரேகை ஸ்கேனர் வழங்காதது தெரியவந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் தனது புதிய சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் டேப் எஸ்4 மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. கேலக்ஸி எஸ்9 அல்லது எஸ்9 பிளஸ் மாடலில் இன்டெலிஜன்ட் ஸ்கேன் செட்டப் செய்யும் அனிமேஷன் வீடியோவே மீண்டும் கேலக்ஸி டேப் எஸ்4 ஃபர்ம்வேர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.  

    இன்டெலிஜன்ட் ஸ்கேன் அம்சம் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்கிறது. இரு தொழில்நுட்பங்ளில் ஏதேனும் இயங்காத பட்சத்தில் மற்றொன்று வேலை செய்யும். 



    வைபை சான்றின் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ்4 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என குறிப்படப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ் 4 ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவிலேயே அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி வாட்ச் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. #Samsung #GalaxyTab
    தம்பு ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் டிஏ4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவு நிறுவனமான தம்பு டி.ஏ. 2, டி.ஏ. 3 மற்றும் டி.ஏ. 4 என மூன்று ஸ்மார்ட்போன்களையும் எஸ்2440, எஸ்2430, ஏ2400, பி1850, ஏ1810 மற்றும் ஏ1800 உள்ளிட்ட ஃபீச்சர் போன் மாடல்களை ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. 

    புதிய ஸ்மார்ட்போன்களில் டிஏ 3 மாடலினை மே மாதத்தில் வெளியிட்ட நிலையில், தற்சமயம் டிஏ 4 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது.



    தம்பு டி.ஏ. 4 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 640x1280 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போன் ஜெட் பிளாக், ஷேம்பெயின் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் 200 நாட்களுக்கு ஸ்மார்ட்போனினை வாரன்டி அடிப்படையில் மாற்றிக் கொள்ளவும், 365 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கிரீனினை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க 600-க்கும் அதிக சர்வீஸ் மையங்களை வைத்திருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 1000-ஆக அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் முன்னதாக கிசுகிசுக்கப்பட்ட தேதியிலேயே கேலக்ஸி நோட் 9 அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய நோட் ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் கியர் எஸ்4 சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    முந்தைய மாடல் போன்று இல்லாமல் புதிய கியர் எஸ்4 சாதனத்தில் பேனல் லெவல் பேக்கேஜிங் வழங்கப்படுகிறது. இது முந்தைய சாதனத்தை விட மெல்லியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்டு 9-இல் அறிமுகமாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை விட நோட் 9 இரு வாரங்கள் முன்னதாக வெளியாகும்.

    இத்துடன் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலுடன் கியர் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் PLP வழிமுறை சார்ந்த சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டு தேதி மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கியர் எஸ்4 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2018 கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவு பேட்டரி திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட் 4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட்4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. முழுமையாய் மறைக்கப்பட்டு இருக்கும் இசட்4 ரோட்ஸ்டர் பிரான்ஸ் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. பிஎம்டபுள்யூ இசட்4 M40i புதிய மாடலின் டாப் என்ட் வேரியன்ட் ஆக வெளியாகும் என்றும் இதில் 6-சிலின்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது.

    இசட்4 டிரைவிங் டைனமிக்-களை சீராக்கி, ஆல்-டிரைவ் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டம்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் புதிய பிஎம்டபுள்யூ இசட்4 மாடலின் மிகமுக்கிய அம்சமாக இருக்கிறது.

    பிஎம்டபுள்யூ இசட்4 கான்செப்ட் அகிலிட்டி மற்றும் டிரைவிங் டைனமிக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் ரக ஸ்டிஃப்னஸ் மற்றும் சஸ்பென்ஷன் தலைசிறந்த ஸ்போர்ட் காருக்கு ஏற்ற ஸ்டீரிங் பிரெசிஷன் மற்றும் டிரான்ஸ்வெர்ஸ் அக்செலரேஷன் கொண்டிருக்கும் என பிஎம்டபுள்யூ நிறுவன அப்ளிகேஷன் சஸ்பென்ஷன் பிரிவு தலைவர் ஜோஸ் வேன் தெரிவித்தார்.



    சக்திவாயந்த 6-சிலிணட்ர் மோட்டாருடன், இசட்4 மாடலில் லேவெர்டு ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட டேம்பெர்கள், புதிய முன்பக்க ஆக்சில், M லைட் அலாய் வீல்கள், M ப்ரோட்ஸ் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட பின்புற ஆக்சில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இன்ஜின் 190 பிஹெச்பி முதல் 425 பிஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கும். கூடுதலாக வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் பவர் மோடில் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. வடிவமைப்பை பொருத்த வரை பிஎம்டபுள்யூ இசட்4 உண்மையான ரோட்ஸ்டர் அம்சங்களுடன் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் தோற்றம் குறித்த முழு விவரங்கள் அறியப்படவில்லை. புதிய பிஎம்டபுள்யூ இசட்4 இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் சூப்பர் AMOLED 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் சாம்சங்-இன் எக்சைனோஸ் 7570 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. ஆன்ட்ராய்டு 8.0 சார்ந்த எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
    - மாலி-T720 MP1
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.9,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் முறையில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.
    ×