என் மலர்
செய்திகள்

30 நொடிகளில் இ.சி.ஜி. எடுக்கும் வசதியுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது. #AppleEvent #AppleWatch4
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.
இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story