search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Watch Series 4"

    ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. #AppleWatchSeries4



    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 4 மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய வாட்ச் மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் சமீபத்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீரந்தது. இந்நிலையில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    40 எம்.எம். மற்றும் 44 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களில் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் டிஜிட்டல் கிரவுன், ஹெப்டிக் ஃபீட்பேக், 50% அதிக சத்தம் வழங்கும் ஸ்பீக்கர்கள், எஸ்4 சிப், 64-பிட் டூயல் கோர் பிராசஸர், புதிய உடல்நலன் அம்சங்கள், புதிய அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் பொருட்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வோரிடம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விலை ரூ.40,000 முதல் துவங்குகிறது.



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 40எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், சீஷெல் ஸ்போர்ட் லூப் / கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் லூப் விலை ரூ.40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.43,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.+செல்லுலார்) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.52,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள், அவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகி இருக்கிறது.

    ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.  

    புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.



    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.28,686) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி முதல்  செய்யப்பட்டு விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பழைய ஆப்பிள் வாட்ச் 3 விலை 279 டாலர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleWatch4
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது. #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.

    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iPhoneXS #AppleWatch



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

    இம்முறை 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்ட ஐபோன்களின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இவை ஐபோன் XS என அழைக்கப்படலாம் என்றும் இவை புதிதாக தங்க நிற ஆப்ஷன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி அனைத்து ஐபோன் மாடல்களிலும் நாட்ச், ஃபேஸ் ஐடி சார்ந்த ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஏ12 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.



    புதிய ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய வாட்ச் மாடல்களில் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய வாட்ச் சீரிஸ் 3 மாடல்களை விட 15% பெரியதாகவும், டிஸ்ப்ளேவை சுற்றி மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் அதிக விவரங்களை கொண்ட புதிய ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அனலாக் ஃபேஸ் நேரத்தை சுற்றி மொத்தம் எட்டு விவரங்களை காண்பிக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சைடு பட்டன் மற்றும் டிஜிட்டர் கிரவுன் இடையே புதிய ஓட்டை காணப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டாவது மைக்ரோபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.



    இத்துடன் புதிய டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைடு பட்டன் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 சார்ந்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி விடும்.

    செப்டம்பர் 12 ஆப்பிள் விழாவில் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 4, ஆப்பிள் ஏர்பவர், ஏர்பாட்ஸ் 2 உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXS #AppleWatch

    புகைப்படம் நன்றி: 9to5mac
    ×