search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎம்டபுள்யூ"

    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ டீசல் வேரியன்ட் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ டீசல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய 6-சீரிஸ் ஜிடி மாடல் லக்சரி லைன் மற்றும் எம்-ஸ்போர்ட் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. தற்சமயம் பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பெட்ரோல் வேரியன்ட் கிரான் டூரிஸ்மோ 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது, பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி டீசல் வேரியன்ட் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும்.

    பிஎம்டபுள்யூ 630d GT சென்னையில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. புதிய 6-சீரிஸ் மாடல் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் GT மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி உள்ளது. மினரல் வைட், கிளேசியர் சில்வர், மெடிட்டரேனியன் புளு மற்றும் பர்கன்டி ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் இரண்டு மெட்டாலிக் பெயின்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த ஆப்ஷன் எம்-ஸ்போர்ட் வேரியன்ட்-இல் மட்டுமே கிடைக்கிறது. மெட்டாலிக் பெயின்ட் ஆப்ஷனில் கார்பன் பிளாக் மற்றும் புளுஸ்டோன் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன.



    பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லக்சரி வேரியன்ட் க்ரோம் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் சிக்னேச்சர் கிட்னி கிரில், முன்பக்கம் கிரில், பம்ப்பர், ரியர் அப்ரான் மற்றும் டெயில்பைப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    எம்-ஸ்போர்ட் வேரியன்ட் M பெர்ஃபார்மன்ஸ் பேக்கேஜ் உடன் கிடைக்கிறது. இந்த பேக்கேஜ் பிரத்யேக ஸ்கர்ட்கள், ரியர் அப்ரான், பெரிய முன்பக்க ஏர்-இன்டேக் மற்றும் M-ஸ்போர்ட் பிரேக் வழங்கப்படுகிறது. M லோகோ காரின் பக்கவாட்டுகள், டோர் சில்கள், கார் சாவி மற்றும் அலாய் வீல்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

    உள்புறம் லக்சரி லைன் மாடலில் இரண்டு பானாரோமிக் கிளாஸ் ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ரியர் சீட்கள், சவுகரியமான குஷன் ஹேன்ட்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லச்கரி லைன் மாடலில் ஆம்பியன்ட் லைட்டிங், தேர்வு செய்யக்கூடிய ஆறு வித லைட் வடிவமைப்புகள், மரத்தாலான உள்பறம், பியல் க்ரோம் நிறத்தில் ட்ரிம் ஃபினிஷன் செய்யப்பட்டுள்ளது.

    M-ஸ்போர்ட் வேரியன்ட் உள்புறம் முழுக்க நப்பா லெதர் இருக்கைகள், கான்ட்ராஸ்ட் ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கைகள், மெமரி அம்சம், சாஃப்ட் க்ளாஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.



    பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் மற்ற அம்சங்களை பொருத்த வரை 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ரியர்-சீட் என்டர்டெயின்மென்ட், 10.2 இன்ச் ஸ்கிரீன், பிஎம்டபுள்யூ நேவிகேஷன், பிஎம்டபுள்யூ கனெக்ட்டெட் டிரைவ் மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி மாடலில் பார்க்கிங் அசிஸ்ட், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், சரவுன்ட் வியூ கேமரா, ரிமோட் கன்ட்ரோல் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், சரவுன்ட் வியூ, ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. 

    பிஎம்டபுள்யூ 630d GT மாடலில் ட்வின்பவர் டர்போ 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 265 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிங் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லக்சரி லைன் விலை ரூ.66.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் M-ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ.73.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் X3 xடிரைவ்30i பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிஎம்டபுள்யூ X3 டீசல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    2018 பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தற்போதைய 3 மற்றும் 5-சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 252 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் செல்லும் என பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. புதிய பிஎம்டபுள்யூ X3 55 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. மற்ற வடிவமைப்புகள் முந்தைய தலைமுறை மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இருக்கிறது. புதிய மாடலின் வீல்பேஸ் பெரியதாகவும், அதிக கேபின் ஸ்பேஸ் கிடைக்கிறது.



    பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே புதிய X3 மாடலின் உள்புறமும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரை மற்றும் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் iடிரைவ் 10.25 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 கோண கேமரா, 40:20:40 ஸ்ப்லிட் ரியர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i 'லக்சரி லைன்' எனும் ஒற்றை வேரியன்ட்-இல் மட்டுமே கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i மாடலின் விலை ரூ.56.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) எனி நிரர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பிஎம்டபுள்யூ 2019 எக்ஸ்5 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 2019 எக்ஸ்5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை எக்ஸ்5 எஸ்யுவி மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பிஎம்டள்யூ மாடல் பிரிமீயம் எஸ்யுவி மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.

    பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது.
     
    இதன் வீல்பேஸ் 42 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, குளோபல் வேரியன்ட் 20 இன்ச் 5-ஸ்போக் கொண்ட வீல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்த ஆப்ஷன் இந்தியாவில் வெளியிடப்படும் மாடலில் இருக்காது என கூறப்படுகிறது.

    பின்புறம் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு, புதிய டெயில் லேம்ப் மற்றும் பம்ப்பர்களை கொண்டுள்ளது. இதன் ஸ்பாயிலர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆன்டெனா புதிய மாடலில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. 



    உள்புற டேஷ்போர்டு அதிநவீன வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 புத்தம் புதிய 'லைவ் காக்பிட் புரோஃபஷனல்' யூனிட் கொண்டிருக்கும் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதில் 12.3 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்களும் அடங்கும், இவை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.

    இந்த சிஸ்டம் 20 ஜிபி இன்டெர்னல் மெமரி, யுஎஸ்பி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் வெயிக்கில் டேட்டாவை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கனெக்ட்டெட் பேக்கேஜ் புரோஃபஷனல் அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், ரிமோட் சேவைகள், கான்சியர்ஜ், நேரலை டிராஃபிக் மற்றும் பல்வேறு இதர தகவல்களை வழங்குகிறது.

    புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மாடலில் Xடிரைவ்40i ட்ரிம் வேரியன்ட் ஆக அறிமுகம் செய்யப்படும். இதில் 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 340 பிஹெச்பி மற்றும் 500 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடலில் தற்போதைய 3.0 லிட்டர் ஸ்டிரெயிட்-சிக்ஸ் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது, இந்த இன்ஜின் 265 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்கியூ வழங்குகிறது. இந்த இன்ஜின்கள் 8-ஸ்பீடு ZF ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் புதிய பிஎம்டபுள்யூ எக்ஸ்5 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட் 4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ நிறுவனம் 2019 இசட்4 ரோட்ஸ்டர் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. முழுமையாய் மறைக்கப்பட்டு இருக்கும் இசட்4 ரோட்ஸ்டர் பிரான்ஸ் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. பிஎம்டபுள்யூ இசட்4 M40i புதிய மாடலின் டாப் என்ட் வேரியன்ட் ஆக வெளியாகும் என்றும் இதில் 6-சிலின்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது.

    இசட்4 டிரைவிங் டைனமிக்-களை சீராக்கி, ஆல்-டிரைவ் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டம்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் புதிய பிஎம்டபுள்யூ இசட்4 மாடலின் மிகமுக்கிய அம்சமாக இருக்கிறது.

    பிஎம்டபுள்யூ இசட்4 கான்செப்ட் அகிலிட்டி மற்றும் டிரைவிங் டைனமிக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் ரக ஸ்டிஃப்னஸ் மற்றும் சஸ்பென்ஷன் தலைசிறந்த ஸ்போர்ட் காருக்கு ஏற்ற ஸ்டீரிங் பிரெசிஷன் மற்றும் டிரான்ஸ்வெர்ஸ் அக்செலரேஷன் கொண்டிருக்கும் என பிஎம்டபுள்யூ நிறுவன அப்ளிகேஷன் சஸ்பென்ஷன் பிரிவு தலைவர் ஜோஸ் வேன் தெரிவித்தார்.



    சக்திவாயந்த 6-சிலிணட்ர் மோட்டாருடன், இசட்4 மாடலில் லேவெர்டு ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட டேம்பெர்கள், புதிய முன்பக்க ஆக்சில், M லைட் அலாய் வீல்கள், M ப்ரோட்ஸ் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரிக் கன்ட்ரோல் செய்யப்பட்ட பின்புற ஆக்சில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இன்ஜின் 190 பிஹெச்பி முதல் 425 பிஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கும். கூடுதலாக வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் பவர் மோடில் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. வடிவமைப்பை பொருத்த வரை பிஎம்டபுள்யூ இசட்4 உண்மையான ரோட்ஸ்டர் அம்சங்களுடன் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் தோற்றம் குறித்த முழு விவரங்கள் அறியப்படவில்லை. புதிய பிஎம்டபுள்யூ இசட்4 இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×