search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் அத்துமீறல்"

    • வேலூர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு
    • முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

    வேலுார்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இணைந்து, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக, கமிஷனர் ரத்தின சாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கக் கூடாது.

    அப்படி நடந்தால் எப்படி வெளிப்படுத்துவது என்ப தற்காகவும் இந்த கூட்டம் நடக்கிறது. அச்சப்பட வேண்டாம், அத்துமீறல்கள் இருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். சம்பந் தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, மாநகராட்சியில் தனியாக குழு அமைக்கப் படுகிறது.

    நிரந்தர பணியாளர்கள் மட்டுமல்ல, ஒப்பந்தஅடிப் படையில் பணிபுரியும் பெண்களும் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் இருந் தால் தைரியமாக புகார் அளிக்கலாம்.

    இங்கு 50 சதவீதம் பேர் பெண்கள் தான், மேயரும் பெண் தான். இங்கு கூறப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு, அதை நீங்கள் மற்ற வர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், சின்னத் திரை பிரபலம் ஜெயச்சந் திரன், பாலியல் துன்புறுத் தல் தடுப்பு சட்டம் 2013 குறித்து விளக்க உரையாற் றினார். பாலியல் தடுப்பு குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

    மாநகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர் விஜயலட்சுமி, பாதாள சாக்கடை திட்ட குழு தலைவர் தினகரன் மற்றும் மாநகராட்சி யில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொணடனர்.

    • இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • மருத்துவமனைக்கு முள்வேலி அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை

    பாட்னா:

    பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் சதார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார பணியாளர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 10ம் தேதி அந்த பெண், மருத்துவமனையின் பின்பகுதியில் தனியாக சென்றபோது, திடீரென பின்னால் இருந்து வந்த நபர் வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துவிடுவதாகவும், முள்வேலி அமைத்து மருத்துவமனைக்கு வரும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சீரியல் கிஸ்சராக இருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு பல பெண்களை இதுபோன்று வலுக்கட்டாயமாக முத்தமிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

    • கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், ‘போதும்... நிறுத்துங்கள்...’ என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசார திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து வருகின்றன.

    இதுதவிர மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் பிரியா சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், 'போதும்... நிறுத்துங்கள்...' என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    அவரது இந்த நூதன விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.
    • திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூர்,

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சினையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள் சில நேரங்களில் தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

    புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.

    அதில் கல்வித்தகவல் மையம் எண் - 14417 'சைல்ட் லைன்' எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் எண் - 1098 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பாடப்புத்தகங்களின் பின்புற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. இது திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ×