search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வதி"

    • கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
    • முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.

    மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

    பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.

    அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.

    சிவப்பு வண்ணப் பட்டாடைகளையும், சிவப்பு கலந்த ஆபரணங்களையும் அணிவிக்கலாம்.

    முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

    • நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
    • ஓம் மங்கள நாயகியே போற்றி!

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    • திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
    • ஏராளமானவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்றுள்ளனர்.

    திருப்புகழ் பாடினால் திருமணம்

    திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.

    இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.

    திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் வசை கூற

    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

    கொடி தான துன்ப மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!


    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    சஷ்டி விரத நியதிகள் II

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது.

    மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.

    விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும்.

    • “ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
    • பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    சஷ்டி விரத நியதிகள்

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.

    இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும்.

    "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும்.

    தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.

    பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    • கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும்.
    • உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி.

    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; கந்தசஷ்டியில் விரதமிருந்தால் "அகப்பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்;

    கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக் கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது.

    அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடை பிடிக்கப்பட வேண்டும்.

    உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி.

    ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    • உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.
    • சஷ்டியன்று அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும்

    சஷ்டி விரதத்தின் ஒப்பற்ற சிறப்பு

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா இந்த 3 அசுர சக்திகளையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும்.

    உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும்.

    உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழிமைப்பதே இந்த விரதத்தின் பெறும் பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப் பெருமானது பேரருள் கிட்டும்.

    சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!

    சகல செல்வங்களையும், சுக போகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திர லாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்.

    • முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.
    • எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.

    சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்

    நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள்.

    நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம்.

    வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம்.

    வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.

    முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.

    எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே.

    இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது.

    எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.

    ×