என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
திருப்புகழ் பாடினால் திருமணம்!
- திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
- ஏராளமானவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்றுள்ளனர்.
திருப்புகழ் பாடினால் திருமணம்
திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.
திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.
சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!