search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக வேட்பாளர்"

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுவை தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராஜ்யசபா எம்.பி., 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியவற்றோடு பாராளுமன்ற தொகுதியையும் பா.ஜனதா பெற்றது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    இருப்பினும் கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என கருதி பா.ஜனதா புதுவை தொகுதியை கூட்டணியில் பெற்றது.

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வசதியாக இருக்கும் என பா.ஜனதா தலைமை கருதியது.

    அதேநேரத்தில் தொகுதியை பெற்ற வேகத்தில் பா.ஜ.க.வால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. முதல்கட்ட பா.ஜனதா பட்டியலில் புதுவை தொகுதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதுவரை வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியான நபர் என பா.ஜனதா நிர்வாகிகளே அமைச்சர் நமச்சிவாயத்தை கைகாட்டியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    இதனால் வேட்பாளருக்காக பலரும் பரிசீலிக்கப்பட்டனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது. ஆனால் அவர்கள் வெளிமாநிலத்தினர் என்ற முத்திரையால் கைவிடப்பட்டது.

    இதனையடுத்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மீண்டும் நமச்சிவாயம் பெயர்தான் முதலிடத்திற்கு சென்றது.

    இதனிடையே புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறுமி படுகொலை பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. இந்த பிரச்சனையை அரசு சரியாக கையாளவில்லை என்ற புகார் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே காரைக்காலை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் என கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கட்சி மேலிடத்துக்கும் புகார் சென்றது.

    இதனால் அவரை வேட்பாளராக்கும் முடிவும் கைவிடப்பட்டுள்ளது. தற்போது புதுவையில் நிலவக் கூடிய சூழலை சமாளித்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள நபராக அமைச்சர் நமச்சிவாயத்தையே பா.ஜனதா தலைமை கருதுகிறது. இதனால் மீண்டும், மீண்டும் அமைச்சர் நமச்சிவாயமே வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

    அவரை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைக்க கட்சியின் தலைமை நேரடியாக பேச திட்டமிட்டுள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • பாஜக எம்.பி உபேந்திர சிங் ரவாத், வெளியான ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக எம்.பி., உபேந்திர சிங் ராவத், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் உடன் உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அறிவுறுத்தலால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது

    ஆனாலும், பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத், அந்த ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் DeepFake AI தொழில்நுட்பத்தால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், நேற்று மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

    பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதி தேர்தலில் போட்டியிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதில் மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    "பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அதனால் தான், பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது X பக்கத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில், போஜ்புரி நடிகரான பவான் சிங் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.


    • வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு.
    • உ.பி.யில் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி- வாரணாசி, அமித்ஷா- காந்தி நகர், மன்சுக் மாண்டவியா- போர்பந்தர், அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜூஜூ, பன்சுரி ஸ்வராஜ்- புதுடெல்லி, அர்ஜூன் முண்டா- குந்தி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்

    அஸ்வினி- காசர்கோடு, கேரளா, நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர், அப்துல் சலாம்- மலப்புரம், கேரளா, மத்திய அமைச்சர் சந்திர சேகர்- திருவனந்தபுரம், கேரளா, மத்திய அமைச்சர் முரளிதரன்- ஆட்டிங்கால், கேரளா ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- குணா, மத்திய பிரதேசம், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்- விதிஷா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

    • மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அம்ருதியா அனைவராலும் பாராட்டப்பட்டார்.
    • எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் 52 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக படேல் ஜெயந்திலால், பாஜக வேட்பாளராக கான்டிலால் அம்ருதியா உள்ளிடோர் போட்டியிட்டனர். இதில், 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ருதியா வெற்றி பெற்றார். அம்ருதியா ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 52 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

    1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றவர். எனினும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து மறக்கப்பட்டிருந்த அம்ருதியா, மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த வீடியோ மோர்பி பால விபத்து காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இதுவே இவரது வெற்றிக்கான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கட்ந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 7 மாத சீரமைப்புப் பணிகள் முடிந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறக்கப்பட்டிருந்தது.

    ×