search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிட மாற்றம்"

    • கலெக்டர் உத்தரவு
    • வருகிற 31-ந் தேதிக்குள் சேர உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    அதன்படி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவராமன், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ரவி, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் நெமிலி வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராக பணியாற்றிய பாஸ்கரன், ஆற்காடு வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலகராகவும், அங்கு பணியாற்றிய பிரபாகரன் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய வெங்கடேசன், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரவிச்சந்திரன் , அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அன்பரசன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ஜெயஸ்ரீ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சேருமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    • பூலம்மாளுக்கும், ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
    • சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை போலீஸ் நிலைய நுண்ணறிவு போலீசாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய செந்தில்குமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

    தொடர்ந்து அவர் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவரை மீண்டும் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார். அவர் திடீரென மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரது மனைவி பூலம்மாளுக்கும், போலீஸ்காரர் செந்தில்கு மாரின் தந்தை ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு வீட்டாரும் செயல்படுமாறு தெரி விக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அந்த இடப்பிரச்சினை மீண்டும் நடந்து வருவதால், செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மீண்டும் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

    மாநகர பகுதியில் ஒரு சில நுண்ணறிவு பிரிவு போலீசார் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்பினர் புகார் கூறுகின்றனர்.

    எனவே மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இதனை கவனத்தில் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரேனும் பணியாற்றினால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நெடுஞ்சாலை 7, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சக்திவேல், சூளகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலகு 1 மோகன் அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் அனிதா, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதே போல சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தேசியநெஞ்சாலை 7, 46, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஓசூர் தேசியநெடுஞ்சாலை, 844 அலகு 1 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 7, தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் நீதியியல் பயிற்சி முடித்து வரும் பெரியண்ணன், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2 தனி தாசில்தாராகவும், நீதியியல் பயிற்சி முடித்து வரும், சக்தி, நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3, தனி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844, அலகு 1 தனி தாசில்தார் காமாட்சி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தார் சிதம்பரம், ஓசூர் கோட்ட ஆய அலுவலராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2, தனி தாசில்தார் வேலு, ஓசூர் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தார் ராஜலட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்க தனி தாசில்தாராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3 தனி தாசில்தார் மோகன், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 1, தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு பிறப்பித்துள்ளார்.

    • நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.
    • மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    சென்னை:

    தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணியிடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.

    * உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம்.

    * மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம்.

    * மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    * உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
    • கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட, கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவா் வள்ளல். இவரை, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழக கனிமவளத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவிக்க கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    இதைத்தொடா்ந்து மீண்டும் திருப்பூா் மாவட்ட உதவி இயக்குநராக வள்ளல் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல், சென்னை கிண்டி கனிமவளத்துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக கனிம வளத் துறை உதவி இயக்குநராக சச்சின் ஆனந்த் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

    • முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர்.
    • வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் சேவியர் (வயது 54). கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இவரை மணல் கடத்தல் கும்பல் அவர் பணியாற்றி வந்த வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்தது.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் முறப்பநாடு போலீஸ் நிலைய ஏட்டு சரவணன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், முறப்பநாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி தற்போது சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் ஆகியோர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

    இது தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி நடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஏட்டு சரவணன், தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகிய 3 பேரும் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • தொடக்கக்கல்வி துறையின் கீழ் 3,312 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
    • அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதன்மூலம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.

    இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின்படி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின் படி நிர்வாக நலன் கருதி தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக உடுமலை நகராட்சியில் பணியாற்றி வந்த துப்பரவு ஆய்வாளர் பி.செல்வம் திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோன்று மற்றொரு துப்புரவு ஆய்வாளர் ராஜ்மோகன் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோன்று தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்த உதயகுமார் உடுமலை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவல் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார்.
    • பிரதீப் குமார் தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரதீப் குமார் (வயது 50) என்பவர் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சியடைந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரதீப் குமார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் பிரதீப் குமார் கணக்காளராக பணிபுரிந்து உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடலூரில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று பிரதீப் குமார் கடலூருக்கு வந்த போது ஏற்கனவே பணிபுரிந்த கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள 3-வது மாடிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரதீப் குமார்3- வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நீதிபதி கே.எல்.பிரியங்கா பெருந்துறை நீதிமன்றத்திற்கு மாறுதலாகி செல்கிறார்.
    • வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக கே.எல்.பிரியங்கா பணிபுரிந்து வந்தார். தற்போது சிவகிரி நீதிமன்றத்தில் இருந்து மாறு தலாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற த்திற்கு செல்ல இருப்பதால் அவருக்கு பிரிவு உபசார விழா சிவகிரி நீதிமன்ற அலு வலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மருதப்பன், பிச்சையா, கண்ணன், யோக ராஜ், பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலர்கள் ஒரே நாளில் பல்வேறு நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளநிலை உதவியாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், மகேஸ்வரி, சக்திமுத்து, வருவாய் உதவியாளர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன், பாலமுருகன், யோகேஷ் குமார், முனியசாமி, கண்ணதாசன், அலுவலக உதவியாளர்கள் காளிமுத்து, முருகேசன், சண்முகப்பிரியா, சேக் முகமது, சதீஷ் முருகன், பாண்டி, முத்து, காளிராஜ் ஆகிய 18 பேர் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நகராட்சிகளுக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×