என் மலர்

  நீங்கள் தேடியது "Mineral resources"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரண்டை அருகே வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  சுரண்டை:

  சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் மெயின் ரோட்டில் தாசில்தார் நல்லையா ஆய்விற்காக சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சரள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் அரசு விதிப்படி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

  நேற்று அதிகாலை 6 மணியளவில் வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி வெள்ளை நிற நீள கல் கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து தாசில்தார் நல்லையா தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டு டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மாரியப்பன் மகன் பாண்டி (வயது 25) என்பவரிடம் விசாரித்த போது அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரணி பகுதியிலிருந்து கனிம வள சட்டத்திற்கு எதிராக வெள்ளை நிற நீள கற்களை அளவுக்கு அதிகமாக கடத்தி வந்ததும், சோதனை நடந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதியில்லை என்பதும் தெரிய வந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கைக்கு உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

  தொடர்ந்து நேற்று பகல் ஒரு மணியளவில் பரன்குன்றாபுரம் விலக்கு அருகே சோதனையில் ஈடுபட்ட போது வந்த லாரியை மடக்கி டிரைவர் சிங்கிலிப்பட்டியை சேர்ந்த கருத்தசாமி மகன் திருமலைச்சாமி (40) யிடம் விசாரித்த போது பாளையங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு குறுமணல் 2 யூனிட் கொண்டு செல்ல உரிமை சீட்டு வைத்திருந்ததும் ஆனால் அதில் 4 யூனிட் மணல் கடத்தப்பட்டதும் தெரியவந்ததையடுத்து லாரியை பறிமுதல் செய்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

  ஏற்கனவே பாளையங்கோட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் நல்லையா வீ.கே.புதூர் பகுதியில் மணல், வண்டல், சரள், நீளக்கல், குண்டுக்கல், கருவேல மரங்களை கடத்திய 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் இப்பகுதியில் கனிமவளங்களை கடத்துவது குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறினார்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைய உள்ளது. தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இந்த சாலை மார்க்கமாக இணைக்க பெரிதும் உதவுகிறது.

  மேலும் விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிற நகரங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சாலையின் வடிவமைப்பில் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமான வரை தவிர்க்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 ஹெக்டேர் பரப்பு வன நிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே அகற்றப்படுவதுடன், இந்த சாலை சுமார் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி மலை பகுதிக்கும், பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கவுத்திமலை கனிமம் குறித்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்து முடிக்கப்பட்டு விட்டது.

  பசுமையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கவுத்திமலை.


  எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது. இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 ஹெக்டேர், புன்செய் நிலங்கள் 605 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.

  இந்த திட்டம் பொதுமக்களின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியதாகும். இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் சீரிய திட்டமாகும்.

  இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை பகுதியில் குவாரியில் கல் உடைக்க அனுமதி கேட்டு கனிம வளத்துறை அலுவலர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல் உடைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கல்குவாரியில் கல் உடைப்பதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மைதிலிக்கு தொடர்ந்து புகார் வந்தது.

  இதையடுத்து உதவி இயக்குனர் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கல் உடைக்கு தொழிலாளிகளிடம், இனி இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று கூறினர்.

  மேலும் கல் உடைத்து கற்களை ஏற்றி கொண்டு வாகனங்கள் செல்லும் வழியை தடை செய்ய பள்ளம் தோண்ட பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது தொழிலாளர்கள், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரம். கல் குவாரியை ஏலம் விடுவதாக இருந்தாலும், அதனை நாங்களே ஏலம் எடுத்து கொள்கிறோம் என்றனர்.

  சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 15 நாட்களுக்கு இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.#tamilnews
  ×