search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிட மாற்றம்"

    • சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    * சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராணிப்பேட்டை ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

     

    • முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரையும், சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் போலீசாரையும், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் போலீசாரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை பணியிட மாற்றம் செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெற்கு மண்டலத்துக்கும், தெற்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் வடக்கு மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சென்னையில் 62 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் மற்றும் சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் 100 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

    • 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
    • அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தட்பகராஜ்

    தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

    வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

    வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

    தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

    அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

    வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

    வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • பணியிட மாற்றத்திற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
    • தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் ஆதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) இருந்த சரவணன் ஊத்துக்குளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த பானுமதி மடத்துக்குளம் தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல (நில எடுப்பு) தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் தமிழ்நாடு வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோல் 5 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவசுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த தமிழேஸ்வரன் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த புஷ்பராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 துணை தாசில்தாராகவும், சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

    • தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • கலெக்டர் சாந்தி உத்தரவு.

    தருமபுரி மாவட் டத்தில் உள்ள 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றிய ஆறுமுகம், பென்னாகரம் வட்டாட்சியராகவும், காரிமங்கலம் வட்டாட்சியராக பணியாற்றிய ரமேஷ், அரூர் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் நிலம் எடுப்பு பிரிவில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய, பார்வதி நல்லம்பள்ளி வட்டாட்சியராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் தனி வட்டாட்சியராக இருந்த ரஜினி, காரிமங்கலம் வட்டாட்சியராகவும், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த கலைச்செல்வி, பாலக்கோடு வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் அரூர் வட்டாட்சியராக இருந்த பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், பென்னாகரம் வட்டாட்சியராக இருந்த சவுக்கத் அலி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், பாலக்கோடு வட்டாட்சியராக பணியாற்றிய ராஜா, நெடுஞ்சாலை துறை நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக பணியாற்றிய சரவணன், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும், நல்லம்பள்ளி தனி வட்டாட்சியராக இருந்த லட்சுமி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஆகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி வட்டாட்சியராக சுகுமார், நல்லம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக அருண் பிரசாத் என 14 வட்டாட்சியர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் தலைவர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

    • சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம்.
    • டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மயில்சாமி காங்கேயம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவிநாசி வட்டாட்சியர் சுந்தரம் உடுமலை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .உடுமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கண்ணாமணி மடத்துக்குளம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
    • வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 26 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர் களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதி யாக திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களி லுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்க ளையும் பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் வாய்ப்பை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடு வதாக பல்வேறு ஊராட்சி செயலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு துறையிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    அந்த மனுக்களை கலெக்டரின் பரிசீலனைக்கு ஊழல் தடுப்பு துறை அறிக்கை அனுப்பியது. அதனை பரிசீலித்த கலெக் டர் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

    திருச்சுழி ஒன்றியத்தில் பள்ளிமடம் ஊராட்சி செயலர் சிக்கந்தர் கனி, நல்லாங்குளம் ஊராட்சிக் கும், நல்லாங்குளம் ஊராட்சி செயலர் முருகன் பள்ளி மடம் ஊராட்சிக்கும், பணியிட மாற்றம் செய்யட்டு உள்ளனர்.

    மேலும் நரிக்குடி ஒன்றி யத்திலுள்ள இருஞ்சிறை ஊராட்சி செயலர் தங்கப் பாண்டியன் வேளாநேரிக் கும், சுப்பையா இருஞ் சிறைக்கும், ராமகிருஷ்ணன் எழுவணிக்கும், ஆதிமூலம் வி.கரிசல்குளத்திற்கும், செல்வபிரபு பிள்ளையார் குளம் ஊராட்சிக்கும், சாரதி திம்மாபுரம் ஊராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.

    • 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
    • பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    • மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,

    இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கிய ராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன் பேரில் போரட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆரோக்கிய ராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.
    • சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

    இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.

    பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார். பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மண ப்பாறை அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    ×