search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்பி.எஸ்.என்.எல். அலுவலக 3-வது  மாடியில் இருந்து விழுந்த அதிகாரி சாவு
    X

    கடலூரில்பி.எஸ்.என்.எல். அலுவலக 3-வது மாடியில் இருந்து விழுந்த அதிகாரி சாவு

    • பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார்.
    • பிரதீப் குமார் தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை பிரதீப் குமார் (வயது 50) என்பவர் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சியடைந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரதீப் குமார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் பிரதீப் குமார் கணக்காளராக பணிபுரிந்து உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடலூரில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று பிரதீப் குமார் கடலூருக்கு வந்த போது ஏற்கனவே பணிபுரிந்த கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள 3-வது மாடிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரதீப் குமார்3- வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×