search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal officers"

    • நகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி மேலாளர் மல்லிகா முதல்நிலை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்கராக இருந்த காளியம்மாள் முதல் நிலை கணக்கராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம் நகராட்சி 1 ஏ மேலாளராக இருந்த மகேஸ்வரன் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    • அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலர்கள் ஒரே நாளில் பல்வேறு நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளநிலை உதவியாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், மகேஸ்வரி, சக்திமுத்து, வருவாய் உதவியாளர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன், பாலமுருகன், யோகேஷ் குமார், முனியசாமி, கண்ணதாசன், அலுவலக உதவியாளர்கள் காளிமுத்து, முருகேசன், சண்முகப்பிரியா, சேக் முகமது, சதீஷ் முருகன், பாண்டி, முத்து, காளிராஜ் ஆகிய 18 பேர் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நகராட்சிகளுக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நகராட்சி முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, செயலாளர் விஜய மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பு.புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியும், அதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×