என் மலர்
உள்ளூர் செய்திகள்

பு.புளியம்பட்டியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
நகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, செயலாளர் விஜய மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பு.புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியும், அதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






